மருதமலை மாமணியே.. தேனும் திணைமாவும்! கடவுள் முருகனை இருமுறை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
கோவை: கோவைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு விருது வழங்கினார் தொடர்ந்து பேசிய அவர் தனது பேச்சில முருகனை கடவுள் முருகனை குறிப்பிட்டு பேசினார் மருதமலை முருகனை வணங்குகிறேன் என பேசிய பிரதமர் தொடர்ந்து தமிழகத்தில் முருகனுக்கு தேனையும் திணையையும் படைக்கிறோம் எனவும் பேசி இருந்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்ற வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற வேளாண் மாநாட்டில் விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றினார். தனது பேச்சின் போது இரண்டு முறை தமிழ் கடவுள் முருகப்பெருமானை குறிப்பிட்டு பேசினார் பிரதமர் மோடி.

கோவை மோடி உரை
நிகழ்ச்சியில் பேசிய அவர்," கோவையில் மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனை நான் தலைவணங்குகிறேன். கலாசாரம், கனிவு ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கி கொண்ட மண் கோவை. தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்கிறது. ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது. தமிழகத்தின் விவசாயிகளின் துணிச்சலை பாராட்டுகிறேன். இங்கே எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டிற்கு வழிகாட்டுகிறார்.
மருதமலை முருகன்
இயற்கை விவசாயம் சிறப்பானது. எனது மனதுக்கு நெருக்கமானது. இந்த மாநாட்டிற்கு வராமல்போயிருந்தால் நான் பல விஷயங்களை கற்காமல் போயிருப்பேன். இயற்கை விவசாயத்தின் மையமாக இந்தியா மாறுகிறது. நமது இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமாக்கி வருகின்றனர். இதனால், கிராம பொருளாதாரம் மேம்படும். இந்திய விவசாயத்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாய ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழும். உலக அரங்கில் முக்கிய இடம்பெறும். இயற்கை வேளாண்மை இந்த நூற்றாண்டின் தேவை.
சிறுதானியம் சாகுபடி
இயற்கை விவசாயத்துடன் சிறுதானியம் பயிர் செய்ய வேண்டும். இது பூமியின் வளத்துக்கு ஊக்கம் அளிக்கிறது. தமிழகத்தின் உணவு பண்பாட்டில் சிறுதானியங்கள் எப்போதும் உண்டு. தமிழகத்தில் முருகனுக்கு தேனையும், திணையையும் படைக்கிறோம் தமிழகத்தில் கம்பு, சாமை போன்ற உணவு பொருட்கள் பல தலைமுறையாக உள்ளன. விவசாயத்தில் வாழும் பல்கலையாக தென் மாநிலங்கள் திகழ்கின்றன.கேரளா மலை பகுதிகளில் பல அடுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை பாக்கு மரம் இடையே ஊடுபயிராக மிளகு உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன.
தமிழக விவசாயிகள்
ஒரு பயிர் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் மாற வேண்டும். ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடி முறையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவக்குங்கள். இயற்கை வேளாண்மை சந்தையை வளப்படுத்த வேண்டும். விவசாயிகளின் தன்னிறைவுக்கு அரசின் ஆதரவு முக்கியம். அதனை தான் இத்தனை ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications