Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

600 பவுன் மட்டுமே பறிமுதல்.. எஞ்சிய 214 பவுன் பவுன் எங்கே? முத்தூட் நிறுவன கொள்ளையில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

கோவை: முத்தூட் நிதி நிறுவனத்தில் 814 பவுன் நகைகளில் 600 பவுன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 214 பவுன் நகை எங்கே என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் அடகு வைத்துள்ளனர்.

இங்கு பணியாற்றிய ரேணுகா தேவியின் உதவியுடன் அவரது கள்ளக்காதலன் சுரேஷ் அங்கிருந்த 814 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

214 பவுன்

214 பவுன்

இந்த நிலையில் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சுரேஷிடம் இருந்து 600 பவுன் நகைகளை மட்டுமே போலீஸார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 214 பவுன் நகைகள் எங்கே என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோவில் தப்பிய சுரேஷ்

ஆட்டோவில் தப்பிய சுரேஷ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் லாக்கர் சாவியை எடுத்து நகைகளை கொள்ளையடித்து விட்டு சுரேஷ் ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டார். சுரேசின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகும். அங்கு அவரது தந்தை நகைப் பட்டறை நடத்தி வந்தார்.

கோவை

கோவை

சுரேஷ் கொள்ளையடித்த நகைகளை அங்கு கொண்டு சென்று தங்கக் கட்டிகளாக மாற்றினார். பின்னர் அவற்றை சாமி படங்களுக்குள்ளும், குளியலறையில் உள்ள சுவிட்ச்-பாக்சுக்குள் மறைத்து வைத்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் கோவை சென்றுவிட்டார் சுரேஷ்.

ஆட்டம்

ஆட்டம்

நிறுவனத்தில் கொள்ளை போன நகைகளோ 814 பவுன். அதை முழுவதையும் உருக்கிவிட்டேன் என சுரேஷ் கூறுகிறார். ஆனால் மீதமுள்ள 214 பவுன் நகை எங்கே என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அந்த நகைகளை சுரேஷ் மறைத்து வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுகிறாரா என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+