கோவை ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் போது அதிர்ச்சி.. விமானி அறையில் லேசர் லைட் அடித்து அட்டகாசம்
கோவை: பெங்களூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கும் போது விமானி அறையில் லேசர் லைட் அடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு என ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 7.50 மணிக்கு பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், தரையிறங்க 3.5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பொழுது, தரையில் இருந்து விமானி அறையின் வலது பக்கத்தில் லேசர் லைட் அடித்துள்ளனர்.

தரையில் இருத்து விமானத்திற்கு லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக , விமானம் தரையிறங்கிய பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடம் மைலம்பட்டி அல்லது வெள்ளானைப்பட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள நிலையில், பீளமேடு போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தை தரையிறக்கும்போது விமானிகள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
சக்தி வாய்ந்த லேசர் ஒளியை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் விமானிகளுக்கு தற்காலிக பார்வையிழப்பும் ஏற்படக் கூடும். இது தரையிறங்கும் நேரத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், விமானங்கள் தரையிறங்கும்போது லேசர் ஒளி பாய்ச்சப்படுவது மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications