சாலையில் நின்ற பைக் மீது வேகமாக வந்து மோதிய கார்...காற்றில் பறந்த இருவர் - பதற வைக்கும் வீடியோ
பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் காற்றில் பறந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை: சாலை விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றன. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சாலை விபத்துக்களால் விலை மதிப்பில்லாத உயிர்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
Recommended Video
விபத்தில் சிக்கியவர்களின் பெயர் ஜோதீஸ்வரன் மற்றும் ராஜசேகரன் என்பதாகும். கோவை அருகே உள்ள மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்காக மதுக்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது ஜி. சங்கம்பாளையத்தை சேர்ந்த கௌதம் என்பவர் காரில் பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியது. இதில் ஜோதீஸ்வரன், ராஜசேகர் இருவரும் தூக்கி வீசப்பட்டு பறந்து சென்று கீழே விழுந்தனர். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் ராஜசேகர் சிறிய காயங்களுடன் தப்பினார். ஜோதிஷ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் காரை ஓட்டி வந்த கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை கடக்கும் போது நில் கவனி செல் என்று சொல்வார்கள். நான்கு வழிச்சாலைகளை கடக்கும் போது அதிக கவனம் தேவை. வாகன ஓட்டிகள் மிதவேகம் மிக நன்று என்பதை மறந்து பறந்து போக விரும்புவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நேரிடுகிறது.

பக்தர்களுக்கு உதவி செய்ய சென்றவர்கள் கொஞ்சம் கவனத்தோடு சாலையை கடந்திருக்கலாம். நடு சாலையில் பைக்கை நிறுத்தியதால் வேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்க நேரிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications