930 கோடி மோசடி.. பெண் இயக்குநரை கடத்தி பணம் பறித்த வழக்கு.. பிரமோத் குமார் ஐபிஎஸ் கோவையில் சரண்
கோவை: திருப்பூரில் 930 கோடி மோசடி செய்த பாசி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் பிரமோத் குமார் ஐபிஎஸ் சரணடைந்தார்.

திருப்பூரில் பாசி போரக்ஸ்' என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தததுது. இந்த நிதி நிறுவனம் 58500 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கொங்கு மண்டலத்தையே அதிர வைத்த இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.. கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
930 கோடி மோசடி வழக்கில் பாசி போரக்ஸ் நிறுவத்தின் இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
முன்னதாக வழக்கு பதிவு செய்யும் போது, மோசடி தொடர்பாக விசாரித்த போலீசார் தன்னை கடத்தி 3 கோடி ரூபாய் பறித்ததாக கமலவள்ளி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் மற்றும் திருப்பூர் டி.எஸ்.பி ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ் சண்முகையா மற்றும் ஜான்பிரபாகர் மீது தனி வழக்கு பதிந்து 2012ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்..
இவர்கள் மீது கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சி.பி.ஐ. தன் மீது பதிந்த வழக்குக்கு எதிராக பிரமோத் குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இதனிடையே இந்தத வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஜான் பிரபாகர் என்பவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் கடந்த ஆண்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்..
அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோவை சி.பி.ஐ. நீதிமன்றம் ஆஜராகுமாறு ஐந்து பேருக்கும் சம்மன் அனுப்பியது.. இதில் பிரமோத்குமார் ஐபிஎஸ் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிபதி கோவிந்தராஜன் கடந் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். பிரமோத் குமார் ஐபிஎஸ் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில், அவரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரமாக தேடி வந்தனர்.. இதையடுத்து பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications