ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம்
கோவை: நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் முக்கியம். ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்த கேள்விக்கு, அது அவரது அறிக்கை, அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என கமல் பதிலளித்தார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர் எனவும், அவரது ஆரோக்கியம் தான் முக்கியம் எனவும் கூறிய கமல், ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தங்களது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மனுநீதி அறக்கட்டளை ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கமல்ஹாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications