கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பா? நடந்தது என்ன?தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Google Oneindia Tamil News

கோவை: அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெலுங்கானா ஆளுநர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிவடையும் வரை தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இது சர்ச்சையானது.

இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்லா இடத்திலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன் என்றார்.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி

தமிழ் தாய் வாழ்த்து

தமிழ் தாய் வாழ்த்து

எதுவும் உள் நோக்கத்துடன் நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும். அதை நான் கேட்டேன். அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் விட்டு விட்டேன் என்று கூறினார். எந்த நிகழ்ச்சி என்றாலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும் கூறினார்.

அமைதியான சூழல்

அமைதியான சூழல்

வன்முறையை இல்லாத அமைதியான சூழல் நிலவ வேண்டும். தமிழகத்தில் கலாசாரத்தை மாற்றும் சூழல் நிலவுகிறது. தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்ற விவாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் கோவில் அதிகம் உள்ளது. அடையாளங்களை மாற்றி செய்யக் கூடாது. அது மோதலை தான் உருவாக்கும்.

வெஸ்டர்ன் ஆடைகள்

வெஸ்டர்ன் ஆடைகள்

கருத்துரிமை எல்லோருக்கும் உள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும். நானும் சுடிதார் அணிகிறேன். ஆடைகளை குறைப்பது தான் அறிவாற்றல் என்றில்லை. அறிவை வளர்த்துக் கொள்வது அறிவாற்றல். மாடனாக இருக்கலாம் வெஸ்டனாக இருக்க வேண்டாம். வெஸ்டர்ன் ஆடைகளை அணிவது எதிரானது.

அமைதியான ஆர்எஸ்எஸ் பேரணி

அமைதியான ஆர்எஸ்எஸ் பேரணி

அரசியல் அமைப்பு தேசியவாத அமைப்பு. புதுச்சேரியில் பேரணி நடத்தினார்கள் அமைதியாக. அதற்கு எதிராக மனித சங்கிலி கேட்டார்கள் அதுவும் நடந்தது. கேரளாவிலும் அமைதியாக நடந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி நடைபெறுகிறது என தெரியவில்லை.

சுதந்திரம்

சுதந்திரம்

எனது தந்தையை தெலங்கானாவில் வைத்திருந்தேன். ஆனால் அவர் என்னிடம் சொல்லாமல் தமிழகம் வந்துவிட்டார். 90 வயது மனிதரை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும். தெலங்கானாவில் தெலுங்கு கேட்க முடியவில்லை என வந்துவிட்டார். சுதந்திரமாக இருக்க சென்று விட்டார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பொன்னியின் செல்வன் குறித்து கமல் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கையில்லை. பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.

English summary
Telangana Governor Tamilisai Soundararajan has clarified that there was no intention in the event that the Tamil Thai valthu was not sung at the program She participated in at Avinasilingam University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X