போலீசில் சிக்கிய டிக்டாக் ஆபாச பேச்சு ரவுடி பேபி சூர்யா- பாய்கிறது குண்டர் சட்டம்?
கோவை: டிக்டாக் மற்றும் யூ டியூப் சேனல்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

திருப்பூரை சேர்ந்த சூர்யா, ரவுடிபேபி சூர்யா என்ற பெயரில் டிக்டாக் செய்து வந்தார். அவருடைய நண்பர் மதுரை சிக்கந்தரும் டிக்டாக் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டனர். பின்னர் யூடியூப் சேனலை தொடங்கியும் அதிலும் இருவரும் ஆபாச பேச்சுக்களுடனான வீடியோக்களை வெளியிட்டனர்.

மேலும் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் சூர்யாவும் சிக்கந்தரும் பேசி வீடியோ வெளியிட்டனர். இதுகுறித்து கோவை இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் மதுரையில் இருந்த ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரவுடிபேபி சூர்யா கோவை மத்திய சிறையிலும், சிக்கந்தரை பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைத்தனர்.
ரவுடிபேபி சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூடியூப் சேனலில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசி வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications