கோவை பெண்ணுக்கு மருந்தாக வந்த இரண்டாவது கணவர்.. எமனாக நின்ற முதல் கணவர்.. கனவிலும் நடக்காத சம்பவம்
கோவை: கோவையில் நடந்த ஒரு துயரமான சம்பவம், குடும்ப வன்முறையின் நீண்டகால தாக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை சமூகத்துக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது. "காயங்கள் உடலிலல்ல... மனதில்தான் அதிகம்" என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டும் வகையில் அனைவரையும் கலங்கடித்துள்ளது... யாரிந்த பெண் மோகனபிரியா?
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயன்.. 35 வயதாகிறது... பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மோகனபிரியா 34 வயதாகிறது... இவரும் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்.

இரண்டாவது கணவர்
இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தனர்.. மோகனபிரியா கர்ப்பமானதால் பிரசவத்துக்காக கோவை வந்தார். கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, மோகனபிரியா பெங்களூர் போகவில்லை... வீட்டிலிருந்தே பணி செய்து வந்தார்.
வெளியில் பார்த்தவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு சாதாரண மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் போலவே தோன்றினார். ஆனால் அந்த அமைதிக்குள், யாருக்கும் தெரியாத ஒரு பெரிய போராட்டம் அவர் மனதுக்குள் நடந்துகொண்டிருந்தது.
முதல் திருமணம்
மோகனபிரியாவுக்கு விஜயனுடன் நடந்தது இரண்டாவது திருமணம் ஆகும்.. முதல் திருமண வாழ்க்கையில் அவர் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான சித்ரவதைகளை அனுபவித்ததாக கூறப்படுகிறது. அந்த கொடுமைகளின் நினைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி துரத்தி வந்துள்ளது... முதல் கணவன் தந்த டார்ச்சர், காலம் கடந்தாலும் அவரது மனதில் ஆழமாக பதிந்திருந்தது... அந்த மன வேதனையால் அவர் சிகிச்சையும் பெறும் அளவுக்கு சென்றிருக்கிறார்..
ஆனால் இரண்டாவது திருமணம் அதற்கு நேர்மாறாக மோகனப்பிரியாவுக்கு அமைந்தது.. விஜயன் மோகனபிரியாவை அன்பாகவும், கனிவாகவும் பார்த்து கொண்டாராம்.. ஒரு குறையும் இல்லாமல் மனைவியை நடத்தி வந்துள்ளார் விஜயன்.. ஆனால் முதல் கணவன் தந்த சித்ரவதையின் நினைவுகள், மோகனபிரியாவை மீண்டும் வாழ்க்கையை முழுமையாக தொடங்க விடாமல் செய்துள்ளன.
மறக்க முடியாத காயங்கள்
இந்த மன உளைச்சலால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகனபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மயங்கி விழுந்தார்... உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோகன பிரியா தற்கொலை செய்த அறையையும் சோதனை செய்தனர்.. அப்போது மோகனபிரியா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில், "எனது முதல் கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் நான் சித்ரவதை அனுபவித்தேன். அதில் இருந்து எப்போது மீளுவேன் என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன். அதுபோலவே அந்த நரகத்தில் இருந்து நான் வெளியே வந்தேன்.
பிறகு 2-வது திருமணம் செய்து கொண்டேன். முதல் கணவர் என்னை கொடுமைப்படுத்தியதற்கு மருந்து போடுவது போன்று எனது 2-வது கணவர் என்னை பாசமாக பார்த்துக் கொண்டார். அவர் என்னை பாசத்தோடு பார்த்து கொண்டார்.
மருந்தாக வந்த கணவர்
அவர் என்னை பாசத்தோடு பார்த்துக்கொண்டாலும், முதல் கணவரால் நான் அனுபவித்த சித்ரவதையை மறக்க முடியவில்லை. அதை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும்அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நான் எனது 2-வது கணவர் மற்றும் குடும்பம், எனது குழந்தையை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் முதல் கணவரிடம் இருந்து பெற்ற சித்ரவதை என் மனதை விட்டு அகலாததால் என்னால் வாழ முடியவில்லை.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் அடைந்த சித்ரவதையை நினைக்கும்போது வாழ்வதற்கே பிடிக்கவில்லை. இதனால் தான் நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன்" என்று தெரிவித்திருந்தாராம்.. இது குறித்த விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்..
மேலும், மோகனபிரியாவுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், அவரது மரணம் குறித்து சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனரும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications