நாட்டு நாய்..நம் வீட்டு நாய்! வெளிநாட்டு நாய்களால் தெருநாய்கள் ஆகிவிட்டது.. நாம் தமிழர் சீமான் வேதனை

Subscribe to Oneindia Tamil

கோவை: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது எனவும், நாய்களை ஒழித்தால் எலிகள் பெருகும். இதனால் ப்ளேக் போன்ற நோய்கள் மனிதர்களுக்கு வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தெருநாய்கள் குறித்து இதில் கமலஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.

நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும்.

Seeman on Stray Dogs

சீமான் பேச்சு

இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது.
நம் நாட்டு நாய்களின் பராமரிப்பு செலவு மிகவும் கம்மி. நாம் உண்டது போக மிச்ச மீதிகளை தான் அதற்கு கொடுப்போம்.வீட்டு வாசலில் கிடப்பான் பாதுகாப்பாகவும் இருப்பான்.

நாட்டு நாய்

நம்மோடு ஆடு, மாடு மேய்க்க வருவான். வேட்டைக்கும் செல்வான். ஆனால் இவர்கள் வளர்த்தும் நாய்க்கு உண்ணும் பிஸ்கட்டும் தனி மருத்துவமும் தனி. அவர் குளிரூட்டப்பட்ட அறையில் தான் இருப்பார். ஆனால் அவர்கள் வாங்கும் அந்த நாய் குட்டிகள் 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இது ஒரு பெரிய சந்தை, என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்.

வெளிநாட்டு நாய்

அதனால் என் நாட்டு நாய் தெரு நாய் ஆகி விட்டது. அது உரிய பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வளவு பெருகி விட்டது. வருவோர் போவோரெல்லாம் பச்சைக் கறி துண்டுகளை வாங்கி போட்டு, அதுபோன்று பழகி விட்டதால் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஆடு, மாடுகளை அது கடித்து விட்டது. பெரம்பலூரில் அதே போன்று நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. நாய்களை ஒழித்தால் எலிகள் பெருகும். இதனால் ப்ளேக் போன்ற நோய்கள் மனிதர்களுக்கு வரும்" என்றார்.

விஜய்

தொடர்ந்து பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்த வரை, பாரதிய ஜனதா அவர்களுக்கு கொள்கை எதிரி, தி.மு.க அரசியல் எதிரி, அப்படியானால் கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்? அப்படியானால் திமுகவும், பாஜகவும் உங்களுக்கு எதிரி என்றால், தமிழக வெற்றி கழகம் காங்கிரசையும், அதிமுகவையும் புனிதப்படுத்துகிறதா?

காங்கிரஸ்

கச்சத் தீவை திருப்பி எடுத்து விடுங்கள் என மோடியிடம் பேசுகிறீர்கள்.. கச்சத்தீவை முதலில் தாரை வார்த்தவர்கள் யார் ? மோடியிடம் ஒரு கிளாஸ் மெட்கிட்ட பேசுவது போல் நீட்டை எடுத்து விடுங்கள் என கூறுகிறீர்கள். ஆனால் அந்த நீட்டை கொண்டு வந்தது யார் ? இவைகளை எல்லாம் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+