காலியான எடப்பாடி பழனிசாமி இமேஜ்.. செங்கோட்டையன் மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணமே அதுதான்!
கோவை: எடப்பாடி பழனிசாமியின் இமேஜை டேமேஜ் செய்ததே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தது எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார். செங்கோட்டையன் பேசுகையில், நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் ஒருங்கிணைப்பு பணிகளை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. அப்படி செய்யவில்லை என்றால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.

இந்த பிரச்சனைக்கு முடிவு வந்தால் தான் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வேன். தென் மாவட்டங்களில் என்ன நிலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 10 நாட்கள் காலக்கெடு. அதற்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தேனியில் சுற்றுப்பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்த நிலையில் திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின், அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுக்கப்பட்டார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம் மூலமாக, ஒரு இமேஜ் உருவாகி வந்தது.
திமுக மீது அதிருப்தியில் இருப்பவர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியை திரும்பி பார்த்தனர். அதிமுகவுக்கு ஒரு நல்ல மைலேஜ் கிடைத்த நிலையில், செங்கோட்டையன் நேரடியாக எடப்பாடி பழனிசாமியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைவருக்கு அமைப்புச் செயலாளர் கெடு விதித்ததை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழும். ஜெயலலிதாவிற்கு எதிராக யார் ஒரு வார்த்தை கூட அதிமுக நிர்வாகிகள் பேச மாட்டார்கள். தற்போது ஜெயலலிதா இடத்திற்கு வந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகி ஒருவர் கெடு விதித்தது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பதவியையும் மொத்தமாக பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்ததாக தெரிகிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications