கோவை நெரிசலுக்கு விடிவுகாலம்..இது மட்டுமல்ல இன்னும் தருவார் முதல்வர்..சொல்வது செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை: தொழில் வளம் நிறைந்த கோயம்புத்தூருக்கு சாலை போன்ற உட்கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகி விட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களின் மேம்பாட்டுக்காக இரு மேம்பாலங்களை பொதுமக்களுக்கு திறந்து வைத்தார்.
கோயமுத்தூர் என்றாலே சமீப காலத்தில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் . மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் தெளிவான திட்டமிடல் இல்லாததால், திருச்சி சாலை, , அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி மற்றும் சத்தியமங்கலம் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலாலே ஸ்ம்பித்தன.]
குறிப்பாக அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலையில் பத்து நிமிடத்தில் இயல்பாக கடக்க வேண்டிய சாலையில் ஒரு மணி நேரம் வரை வாகனம் ஆமை வேகத்திலேயே மெல்ல ஊர்ந்து பயணிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

கோவை நெரிசல்
ஆம்புலன்ஸ் , அத்யாவசிய தேவைக்காக பயணிப்பவர்களுக்கு கோயமுத்தூர் சாலைகள் சவாலானதாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் மந்தமான மேம்பால பணிகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டது.

புது மேம்பாலம் திறப்பு
மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம் 238 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக கட்டி முடித்திருக்கின்றனர். இது உக்கடம் புறவழி, பெரிய மருத்துவமனை சாலையை இருபுறங்களிலும், திருச்சி , மதுரை, நெல்லை தென்மாவட்டங்களுக்கான பிரதான சாலையை இணைக்கும் விதமாக கட்டியிருக்கின்றனர்.

ரூ.60 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள்
இதே போன்று கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவதத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.

மக்கள் மகிழ்ச்சி
கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி ஆர் நடராஜன், சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அம்மன் அர்ஜுனன், கேஆர்.ஜெயராமன், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். நீண்ட நாட்களாக வாகன ஓட்டிகள் பாலம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று பாலம் திறக்கப்பட்டதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

நிறைய தருவார் முதல்வர்
தொழில் வளம் நிறைந்த கோயமுத்தூருக்கு சாலை போன்ற உட்கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகி விட்டது. என்றும், தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications