மேடம், உங்க பாஜக "ஒத்த ஓட்டு" வாங்கியிருக்கே.. கூலாக கேட்ட கேள்விக்கு ஆவேசமான குஷ்பு.. பதிலை பாருங்க
கோயம்புத்தூரில் ஒத்த ஓட்டு வாங்கியது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி ஒன்று தடைவிதித்தது... இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.. உடனே மற்றொரு பிரிவினர் காவித்துண்டு அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
இது தொடர்பான வழக்கும் கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கான தீர்ப்பு வரும்வரை மதம் சார்ந்த உடைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

பாஜக தலைவர்கள்
இந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது... 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு இந்த ஹிஜாப் விவகாரம் எந்த மாதிரியாக எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.. அதேபோல தமிழகத்திலும் அடுத்த சில தினங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது.. இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிஜாப் விவகாரம் எந்த அளவுக்கு பாஜகவுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரியவில்லை.. அல்லது பாஜக தனித்து போட்டியிட்டு, தன்னுடைய பலத்தை எந்த அளவுக்கு பெருக்கி காட்டும் என்றும் தெரியவில்லை.

தீவிர பிரச்சாரம்
ஆனால் பாஜக தலைவர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.. அந்த வகையில் அக்கட்சியின் குஷ்புவும் பிரசாரம் செய்து வருகிறார்.. இன்றைய தினம் குஷ்பு பிரச்சாரம் செய்து வருகையில், செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.. அவரிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.. அதற்கு அவர், ஹிஜாப் அணிந்து வருவது அவர்களுடைய தனிப்பட்ட தேர்வு. ஆனால் ஸ்கூலுக்கு யூனிபார்மில்தான் வரவேண்டும்... பள்ளிக்கூடத்திற்கு வெளியில் வரை ஹிஜாப் அணிந்து வரலாம்... பள்ளிக்குள் நுழையும்போது யூனிபார்ம் முக்கியம்.

காவித்துண்டு
ஹிஜாப் அணிவது தவறு என்றால், காவித்துண்டு அணிவதும் தவறுதான்... இந்த விவகாரம் குறித்து அரசியல் செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே.. நாங்களும் எதிர்க்கட்சிகளுக்கு அதைத்தான் சொல்றோம்.. தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றியதாக குற்றஞ்சாட்டாதீர்கள்.. காவிக்கொடி ஏற்றியது எம்ப்டி கம்பத்தில்தான்... இருந்தாலும் அது தப்புதான்.. பள்ளிக்கூடத்திற்குள் ஜாதி, மதத்தை கொண்டு செல்லக்கூடாது... டர்பன்கள் அணிவது மற்றும் சீக்கியர்கள் குறித்து இப்போ பேச்சு எதற்கு? இந்த விவகாரம் இந்து- முஸ்லிம் இடையிலானது மட்டும்தான், வேற கேள்வி இருந்தால் கேளுங்க" என்றார் குஷ்பு.

ஒத்த ஓட்டு
உடனே செய்தியாளர்கள், "மேடம், போன உள்ளாட்சி தேர்தலில் கோயம்புத்தூரில் பாஜக ஒத்த ஓட்டுதான் வாங்கியிருக்கு.. இப்போ எப்படி" என்று கேட்டனர்.. அதற்கு குஷ்பு, "பரவாயில்லை.. நாங்க அதை இப்போ மாத்தி காட்டுவோம்.. ஏன் அன்னைக்கு திமுக 2 சீட்டுல மட்டும் ஜெயிச்சிட்டு, இன்னைக்கு ஆட்சியை பிடிக்கலயா அவங்க? இதே பாஜக எங்கியுமே ஜெயிக்காம இருந்து, இப்போ 4 சீட்டை ஜெயிக்கலையா? அங்கே 300 சீட்டை பிடித்து ஆட்சியை பிடிக்கலையா? ஒரு சீட்டோ, 2 சீட்டோ, அது பிரச்சனை இல்லை.. முதல்ல தைரியம் இருக்கணும்.. களத்தில் இறங்கி வேலை பார்க்க தைரியம் இருக்கணும்" என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications