கோவையில் ஸ்மிருதி இரானிக்கு வந்த சோதனை.. "ஒன்னு ரெண்டு மூனு.." எண்ணிப் பார்த்த வானதி! பெரும் அப்செட்
கோவை: மத்திய அமைச்சர் அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவைக்கு வந்துள்ள நிலையில், அங்கு நடந்த ஒரு விஷயம் அவரை அப்செட் ஆக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்குக் கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாகப் பல மத்திய அமைச்சர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இங்கு அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர்,
மத்திய அரசுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்துகின்றனர். பல மத்திய அமைச்சர்கள் இப்படி ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள்
அதன்படி மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி இம்மாத தொடக்கத்தில் தமிழகம் வந்து இருந்தார். கடந்த வாரம் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்து இருந்தார். அதேபோல நரேந்திர சிங் தோமர் கோவை சில நாட்களுக்கு முன்பு கோவையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஸ்மிருதி இரானி
இந்தச் சூழலில் தான் இப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தமிழகம் வந்து உள்ளார். அவரும் நரேந்திர சிங் தோமர் போலவே கோவைக்குச் சென்று உள்ளார். கோவையில் பாஜகவுக்கு ஏற்கனவே ஓரளவு பலம் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் தான் வானதி சீனிவாசனும் கூட வென்று இருந்தார். இதனால் கோவையில் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை பாஜக
இதன் காரணமாகவே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவை வந்து இருந்தார். அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்கள் இல்லை
கோவை சூலூரில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஸ்மிருதி இரானி தலைமை தாங்கினார். இதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். மற்ற நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் குறைந்த அளவிலேயே ஆட்கள் கூட்டத்தில் இருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்மிருதி இரானி பேசும் போது குறைவான உறுப்பினர்களே வந்து இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

ஒன்னு ரெண்டு மூனு
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் எத்தனை பேர் வந்துள்ளனர் என்று எண்ணுமாறு ஸ்மிருதி இரானி கூறினார். இதையடுத்து மைக்கை பிடித்த வானதி சீனிவாசன், "மொத்தம் எத்தனை மாவட்ட துணைத் தலைவர்கள் வந்து இருக்கிறீர்கள். ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 8 துணைத் தலைவர்கள். அப்படிப்பார்த்தால் 8*3 மொத்தம் 24 துணைத் தலைவர்கள் வர வேண்டும்.

அப்செட்
ஆனால், அவங்க எல்லாம் வரலையே.. இங்கு வந்துள்ள மாவட்ட துணைத் தலைவர்கள் எல்லாம் கைகளைத் தூக்குங்கள்" என்று எண்ணத் தொடங்கினார். மொத்தம் இருக்கும் 24 மாவட்ட நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டுமே இந்தக் கூட்டத்திற்கு வந்தாகக் கூறப்படுகிறது. முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு நிர்வாகிகளே வரவில்லை என்றால் எப்படி என்று டென்ஷன் ஆனார்.. குறைவான நபர்களே வந்ததால் ஸ்மிருதி இரானி மட்டுமன்றி வானதி சீனிவாசனும் அப்செட் ஆனார்.

பியூஷ் கோயல்
முன்னதாக நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் திமுகவைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், ரேசன் கடைகளுக்கு மத்திய அரசு தரம் வாய்ந்த அரிசியை அனுப்பினாலும் திமுக அரசு மக்களுக்கு ரேசன் கடைகளில் தரமற்ற அரிசியையே வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications