விறுவிறுவென வந்த டீம்.. வானதிக்காக டெல்லி அனுப்பிய மெசேஜ்.. ப்பா அதுக்கப்பறம் கமல் செஞ்சதுதான் மாஸ்!
கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும் இடையில் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் கோவை தெற்கின் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்குகிறார்.
இதனால் இங்கு கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. கடைசி நேரத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற்று, மொத்தமாக தேர்தலில் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலைதான் இங்கு நிலவுகிறது.

வானதி
இந்த நிலையில் கோவை தெற்கில் வானதியின் வெற்றிக்காக பெரிய டீமே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறதாம். இதற்காக டெல்லியில் இருந்தும், தேசிய பாஜகவில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கோவையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது . இதனால் 7க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இங்கு களமிறங்கி உள்ளனர்.

மேசேஜ்
பாஜகவில் 20 பேர் போட்டியிடுகிறார்கள் .. அதில் உங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது வெற்றிபெற்றுவிடுங்கள்.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு அமைச்சர் பதவியை பெற்று தருகிறோம் என்றும் கூட வானதியிடம் சில பாஜக மூத்த நிர்வாகிகள் பேசி உள்ளனராம். உங்களின் வெற்றி மிக முக்கியம்.

கொங்கு
கோவையில் நீங்கள் வென்றால்.. பாஜகவிற்கு அது பெரிய வளர்ச்சியாக இருக்கும். கொங்கில் மீண்டும் பாஜக கவனம் பெறும் என்று கூறி வானதிக்கு பாஜக நிர்வாகிகள் ஊக்கம் அளித்துள்ளனர். வானதியும் தொடர்ந்து களத்தில் நின்று தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு மாதமாகவே கோவை தெற்கில் வானதி தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்.

தீவிரம்
இதில் வானதி பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு பதிலாக.. ஒவ்வொரு தெருவாக சென்று நேரடியாக மக்களிடம் வாக்குகளை கேட்கிறார். கமல்ஹாசன் டஃப் பைட் கொடுப்பார்.. அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதுதான் வானதியின் திட்டமாக இருக்கிறது. கோவை தெற்கு தொகுதி சிறிய தொகுதிதான் என்பதால் முடிந்த அளவு நேரடி பிரசாரங்களை மேற்கொள்ளலாம்.

பாஜக நிர்வாகிகள்
வாகனத்தில் செல்ல வேண்டாம். நேரடியாக நடந்தே செல்வோம் .. இதன் மூலம் அதிக மக்களை சந்திக்க முடியும் என்று வானதி நம்புகிறார். இவருக்கு ஆதரவாக ஒவ்வொரு தெருவிலும் அதிக எண்ணிக்கையில் பாஜக நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கமலும் விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து கவுண்டர் அட்டாக்குகளை செய்து வருகிறார்.

கமல் பிளான்
கமல்ஹாசனும் பாஜகவின் திட்டங்களை புரிந்து கொண்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஸ்டைலில் சாலையில் இறங்கி மக்களோடு மக்களாக வலம் வருகிறார். ஆட்டோவில் செல்வது, வாக்கிங் செல்வது என்று மக்களோடு மக்களாக கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார். தேவைப்படும் போது பக்கத்து மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் கமல் செல்கிறார்.

பதிலடி
வானதி வீடு வீடாக செய்யும் பிரசாரங்களுக்கு பதிலடியாக கமல்ஹாசனும் பெரிய கூட்டங்களை நடத்தாமல் மக்களோடு மக்களாக பிரசாரம் மேற்கொள்கிறார். சமீபத்திய பிரசாரம் வானதிக்கான பதிலடிதான் . இதனால் கமலின் இமேஜ் கோவை தெற்கில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இவரின் பிரசார ஸ்டைல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹிட்
தற்போது களநிலவரத்தின்படி வானதி, கமல் இருவரும் தற்போது நெக் டூ நெக் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. திமுக கூட்டணி இதுவரை சீனிலேயே இல்லை. இப்போதுவரை
மநீம, பாஜக இடையில்தான் கோவை தெற்கில் போட்டி நிலவி வருகிறது .












Click it and Unblock the Notifications