"மெகா பிளான்.." கோவைக்கு ஸ்பெஷல் திட்டத்தை இறக்கும் திமுக அரசு.. தமிழ்நாட்டிலேயே முதல்முறை
கோவை: தொழில் நகரான கோவைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வரும் அதே சூழலில், இப்போது அங்கே முக்கிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவைக்கு முக்கிய இடம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோயமுத்தூர் இருக்கிறது.

தொழில் நகரான கோவையில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி ஐடி நிறுவனங்களும் ஏகப்பட்டது இருக்கிறது. சென்னைக்கு அடுத்து ஐடி ஹப்களில் முக்கியமான ஒன்றாகவும் கூட கோவை இருக்கிறது.
கோவை: இதனால் கோவையிலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொண்டே வருகிறது. அதேபோல இப்போது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கும் மாசு மற்றும் பருவநிலை மாற்றப் பாதிப்புகளில் இருந்து கோவையும் தப்பவில்லை. இந்தச் சூழலில் கோவையில் இப்போது புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
'கார்பன் நியூட்ரல் கோவை' என்ற திட்டத்தைத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார், தமிழ்நாட்டில் இதுபோன்ற முன்னெடுப்பைத் தொடங்கும் முதல் நகரம் கோவை ஆகும். இதன் மூலம் கோவை வரும் 2050 ஆம் ஆண்டில் கோவை கார்பன் நியூட்ரலாக மாறும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடந்தது. இதில் கோவை எம்.பி நடராஜன், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இத்திட்டத்தின் இயக்குநரான கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோரும் பங்கேற்றனர். கால நிலை மாற்றம் குறித்த ஆவணத்தை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துணி பை ஏடிஎம் ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

ஏன் முக்கியம்: இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், "கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், பசுமை நிலப்பரப்பை அதிகரிக்கவும், அதிக மரக்கன்றுகளை நடவும் பொதுமக்களிடையே இதை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். அதேபோல மின்சார வாகன பயன்பாட்டிற்கும் நடவடிக்கை எடுப்போம்.
கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,344 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கீழ் 584 தொழிற்சாலைகள் ரெட் வகையிலும், 1964 ஆரஞ்சு வகையிலும், மீதமுள்ள 794 தொழிற்சாலைகள் பச்சை வகையிலும் தான் உள்ளது. ரெட் பிரிவில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலைகளும் குறைந்தது 100 மரக்கன்றுகளை நட வேண்டும். அதே நேரம் அனைத்து தொழிற்சாலைகளும் மரங்களை நட்டால் 10% கார்பன் வெளியேற்றத்தை ஈஸியாக கட்டுப்படுத்தலாம்
மெகா பிளான்: தமிழ்நாட்டில் இதுவரை 2.85 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலம் முழுக்க 10 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். ஆலமரம், அரசமரம், புங்கன் மற்றும் வேப்ப மரம் என்று அனைத்து வகையான பூர்வீக மரங்களை நட கவனம் செலுத்துகிறோம், அவை ஒரு வருடத்தில் அதிக ஆக்ஸிஜனை வெளியிடும்" என்றார்.
மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் குவாரிகள் அதிகளவில் வெடிபொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பசுமை அமைப்பு: அடுத்த நான்கு மாதங்களில் கோவை மாவட்டத்திற்குப் பசுமை இல்ல வாயு அமைப்பு உருவாக்கப்படும் என்று செயலாளர் சுப்ரியா சாஹு கூறினார். மேலும், மாவட்டத்தில் வல்லுநர்களைக் கொண்ட காலநிலை குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்லுயிர் பெருக்கத்திற்கான மையமாக இருப்பதால், கார்பன் நியூட்ராலிட்டியை நோக்கி செல்ல கோவை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் கோவை இதிலும் சிறப்பாக இருக்கும் என்றும் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications