சூரிய கிரகணத்துடன் சூடான கோழிக்கறி - கோவையில் தபெதிக விருந்து! சுவைத்து சாப்பிட்ட மக்கள்
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூடநம்பிக்கைகளை தகர்க்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழங்கிய கோழிக்கறி விருந்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவில மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த மறைந்தது.
சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஊட்டி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சூரிய கிரகணம் தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

சிறப்பு வழிபாடுகள்
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடை சாத்தப்பட்டன. ஒரு சில கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மசூதிகளில் நடைபெற்ற சூரிய கிரகண சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

மூட நம்பிக்கை
கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது எனவும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரியார் திடல்
அந்த வகையில் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் உள்ள பெரியார் திடலில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வை நடத்தி இருக்கிறது. கிரகணம் உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு சிற்றுண்டி விருந்து நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டார்கள். இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்
இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கிரகண நேரத்தில் கோழிக்கறி குழம்பு செய்து சாப்பிட்டனர். இதில் நல்லிசெட்டிப்பாளையம் கிராம மக்கள் கலந்துகொண்டு தபெதிக அமைப்பை சேர்ந்தவர்கள் வழங்கிய கோழி குழம்பை சோறுடன் சேர்த்து சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications