கோவையில் புதிய மேம்பாலம் திறந்து வைத்தார் முதல்வர்.. தென் மாவட்டங்களுக்கு இனி ஈஸியா பயணிக்கலாம்
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
கோவை: புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். 3 கி.மீ. நீளம் கொண்ட சுங்கம்- ராமநாதபுரம் மேம்பாலம் தென்மாவட்ட சாலையை இணைகின்றன.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழலில், திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

திருச்சி சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் இருந்து பங்குச்சந்தை அலுவலகம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. மொத்தம் ரூ.232 கோடி செலவில் 3.15 கி,மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்த மேம்பாலமானது, சுங்கம் பகுதியில் இருந்து உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலமானது 17.20 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. சுங்கம் பகுதியில் ரவுண்டானாவில் மட்டும் 19.60 மீட்டர் அகலத்தை இந்த பாலம் கொண்டுள்ளது. 3.15 கி.மீ தூரமுள்ள மேம்பாலத்திற்கு மொத்தம் 111 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தூணுக்கும் இடையே 25 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. மேம்பால கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ள சூழலில், எப்போது பாலங்கள் திறக்கப்படும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணிமுடிவடைந்த நிலையில் இன்றைய தினம் காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். 3 கி.மீ. நீளம் கொண்ட சுங்கம்- ராமநாதபுரம் மேம்பாலம் தென்மாவட்ட சாலையை இணைகின்றன. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதனால் சுங்கம் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications