பணத்துக்காக பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய.. தாய் கள்ளக்காதலனுடன் கைது.. கோவையில் நடந்தது என்ன?
கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே பணத்திற்காக தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் ஒருவர் விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயையும், அவரது ஆண்நண்பரையும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோவை புறநகர்ப் பகுதியில் ஐடி இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்வது, கொலை, திருட்டு, சொகுசு விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்வது போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

கோவையில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கோவை மாநகர காவல் துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட சொகுசு விடுதி ஒன்றில் வெளிநாட்டு அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் நெட்வொர்க் கும்பல் ஒன்றை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதேபோல, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோர் தங்கும் அறைகள், விடுதிகள் உள்ளிட்டவற்றிலும் போலீஸார் தொடர்ந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு கஞ்சா, போதைப் பொருள்கள், கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட், ஆயுதங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சாதாரணமாக வீடுகளை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விபச்சராத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சந்தேகப்படும் வகையில் வசிப்போர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
அந்த வகையில், கருமத்தம்பட்டி பகுதி அருகே விபச்சாரம் நடத்தப்படுவது குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் பணத்திற்காக பெற்ற மகளையே தாய் விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த நபர்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதும், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து 20 வயதான தனது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ராசாத்தியையும் அவரது ஆண் நண்பர் பிரேம் நசீரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 20 வயது பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பணத்துக்காக தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகளையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் விபச்சாரத்தில் தள்ளியுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications