முடியல.. “மனசு ரொம்ப வலி(மை)க்குது”.. வலிமை தள்ளிப்போனதால் கதறிய கோவை அஜித் ஃபேன்ஸ்
கோவை:
கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள அஜித் ரசிகர்கள் "மனசு ரொம்ப வலிக்குது" என்று நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Recommended Video
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை 'அப்டேட்' வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் 'டிரெண்ட்' செய்து வந்தனர். வலிமை அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது.

படத்தின் டைட்டில், மோசன் போஸ்டர், சிங்கில்ஸ், டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் அவ்வப்போது குஷிப்படுத்தி வந்தது போனி கபூர் தரப்பு. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொங்கலை வலிமையுடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் புத்தாண்டு முதல் கண்விழித்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஆசையில் மூனு யூனிட் மணலைக் கொட்டியது கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர். இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகரள் வேதனையுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு தங்களைது கவலையை தெரிவித்துள்ளனர்.
தற்போது போஸ்டரானது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டிய இளைஞர்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் போய் வேற வேலை இருந்தா பாருங்கய்யா என எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications