Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கேரளாவுக்கு இனி ஈஸியா போகலாம்.. கோவை மக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் பிரதான பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல்தான். இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஊட்டி மற்றும் கேரள மாநிலத்துக்குச் செல்லும் மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். நீண்டகாலமாக உள்ள இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் ராக்கெட் வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன மேற்குப் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள்.

கோவை மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பாலக்காடு பிரதான சாலையில் உள்ள மைல்கல்லில் தொடங்கி நரசிம்மநாயக்கன் பாளையம் வரை சுமார் 32 கிலோ மீட்டருக்கு மேற்குப் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடக்கும் இந்தப் பணி மொத்தம் 15 வருவாய் கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

western bypass road nilgiri

இதில், முதல்கட்டமாக மைல்கல்லில் தொடங்கி மாதம்பட்டி வரை கிட்டத்தட்ட 11.8 கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் மதிப்பில் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள மேற்குப் புறவழிச் சாலையில் முதல்கட்டப் பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த மேற்குப் புறவழிச் சாலை அமைந்தால் கோவை மாவட்டத்துக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும், மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்..

கோவையில் போக்குவரத்து போலீஸார் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் 26 லட்சம் வாகனங்கள் உள்ளதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர வெளியூர் மற்றம் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோவை நகர்ப் பகுதிக்குள் வந்து செல்கின்றன.

நீலகிரி மற்றும் கேரள மாநிலத்துக்குள் செல்ல கட்டாயமாக கோவை நகர்ப் பகுதி சாலைகளைத்தான் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டும். இதனால், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விரயம், காலவிரயம், அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனால், கோவை நகர்ப் பகுதிக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், நகர்ப் பகுதியை கடந்து செல்ல 2 மணி நேரம் கால தாமதமும் ஏற்படுகிறது.

எனவே, கோவை நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை நகருக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் 2009 இல் கோவை - பாலக்காடு சாலையில் மைல்கல்லில் இருந்து நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 32 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேற்குப் புறவழிச் சாலை திட்டம் வேகமெடுத்துள்ளது. மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இப்பணிகளுக்கு முதல்கட்டமாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் முதற்கட்டப் பணிகள் மதுக்கரை, மைல்கல்லில் இருந்து மாதம்பட்டி வரை 11.80 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பதினைந்து வருவாய் கிராமங்கள் வழியாக இந்த மேற்குப் புறவழிச் சாலை அமையவுள்ளது. இச்சாலையில் தலா 7 மீட்டர் அகலத்துக்கு ஓடுதளமும் அமைக்கப்படவுள்ளது. இந்த வழியாக மெட்ரோ ரயில் திட்டம் எதிர்காலத்தில் இயக்க வாய்ப்பிருந்தால் மேற்குப் புறவழிச் சாலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஐந்து மீட்டர் அகலத்திற்கு மையத் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இரண்டு இடங்களில் மேம்பாலம், பதிமூன்று இடங்களில் சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில், சிறிய பாலங்கள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேற்குப் புறவழிச் சாலையின் தொடக்கப் பகுதியான சுகுணாபுரம், மஞ்சப்பள்ளம் ஓடை மீது 30 கோடி ரூபாய் மதிப்பில் 800 மீட்டர் நீளத்தில் 6 தாங்கு தூண்கள் நான்கு வழிப் பாதையாக மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்ட சாலையும், மூன்றாம் கட்டமாக நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 8.52 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேற்குப் புறவழிச் சாலை அமைக்கும் பணி 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவடையச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புறவழிச் சாலை அமைந்தால் பாலக்காடு சாலையில் இருந்து வாகனங்கள் கோவை மாநகருக்குள் வராமல் புறநகர் சாலை வழியாக நரசிம்மநாயக்கன் பாளையம் சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டிக்குச் செல்ல முடியும். இதன் மூலமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளில் பயண நேரம் கணிசமாகக் குறைக்கப்படுவதுடன் அலைச்சலும் குறையும். கோவை மாநகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+