விடிகாலையில்.. அப்பார்ட்மென்ட்டிற்குள்.. சிக்கிய 4 பெண்கள்.. 2 அண்ணன்களும் உடந்தை.. கோவை ஷாக்
வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை: அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்களை திருடும் 5 பெண்களை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் சமீப காலமாகவே வீடுகளுக்குள் பொருட்கள், நகைகள், செல்போன்கள் திருடு போவதாக மாநகர போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது.
குறிப்பாக, வெரைட்டி ஹால், செல்வபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக அங்கிருக்கும் அபார்ட்மென்ட்களுக்குள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன

பெண்கள்
அந்த புகார்களின் அடிப்படையில் போலீசாரும், தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் 4 பெண்கள் சிக்கினர்.

செல்போன்
இவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நுழைந்து, கொஞ்ச நேரத்தில் திரும்பி வெளியே வருவதும், அந்த வீடுகளில் நுழைந்து செல்போன்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு வருவதும் அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.. ஆட்கள் வீடுகளுக்குள் இருக்கும்போதே இந்த பெண்கள் நுழைந்து திருடி உள்ளனர்..

சிசிடிவி காட்சி
வெரைட்டிஹால் அருகே ஒரு வீட்டில் 2 பெண்கள் வீடுகளுக்குள் நுழைந்த காட்சிகளை வைத்து, அந்த அடையாளங்களின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்துவிட்டனர்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 2 பெண்கள் பெயர்கள் அடிபட்டன.. அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் சௌரியம்மாள் என்பது தெரியவந்தது.. இந்த இருவரின் அண்ணன்கள் 2 பேர் உள்ளனர்.. அவர்கள் அந்து மற்றும் ரமேஷ்.

அண்ணன்கள்
சகோதரிகள் திருடி கொண்டு வந்தால், அந்த பொருட்களை கொண்டு போய் மார்க்கெட்டில் விற்று வருவதுதான் இந்த சகோதரர்களின் வேலையாம்.. பெரும்பாலும் விடிகாலை நேரங்களிலேயே இத்தகைய திருட்டுகள் நடந்துள்ளன... கோவிலுக்கு கூழ் ஊற்ற காணிக்கை வசூல் செய்வது போன்று வீடுகளை நோட்டமிட்டு வருவார்களாம். பிறகு சம்பந்தப்பட்ட வீடுகளில், விடிகாலை நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளபோது, இந்த பெண்கள் நுழைந்து திருடுவார்களாம்.. இப்போது அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications