கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து.. அபாய எச்சரிக்கை மணி அடிக்கும் இந்து முன்னணி காடேஸ்வரன்

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை திருமாவளவன்,சீமான் உள்ளிட்டோர் திசை திருப்ப பார்க்கின்றனர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காமராஜ் நகர் நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஸ். கல்லூரி மாணவரான இவர் இந்து இளைஞர் முன்னணியின் நகர பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு: இஸ்லாமியர்களை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் பிரச்சனை வரும்...சீமான்பெட்ரோல் குண்டு: இஸ்லாமியர்களை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் பிரச்சனை வரும்...சீமான்

 3 சம்பவங்கள்

3 சம்பவங்கள்

மேட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், கார் உடைப்பு உள்ளிட்ட 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

அப்போது,பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னர் பெரிய கலவரத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது. பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன்,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த சம்பவங்களில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே செய்துள்ளதாக அவர்கள் வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணை

விசாரணை

சரியான விசாரணை செய்யாமலேயே இந்து தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என திசை திருப்ப பார்க்கின்றனர். போலீஸார் முறையான விசாரணை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு சிலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

நீலகிரி ராசா

நீலகிரி ராசா

மேலும், நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மேட்டுப்பாளையம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ராசா வராமல் இருப்பதே நல்லது. அவர் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

English summary
Hindu front movement state president Kadeswara Subramanian says that Thirumavalavan and Seeman are diverting petrol bomb incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X