கோவையில் நடக்கும் மூன்று சூப்பர் சம்பவங்கள்.. சர்வதேச தரம்.. விளையாட்டு வீரர்களுக்கு குட்நியூஸ்
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் மேற்கு மண்டலம் 33-வது வார்டு ஜீவாநகரில் 1.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.90 கோடியில் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரத்தில் பாரா ஒலிம்பிக் பல்வேறு விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகள் மற்றும் கழிப்பறைகள், யோகா மையம், முதலுதவி சிகிச்சை மையம், பார்வையாளர்கள் அமரும் பகுதி என பல வசதிகளுடன் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரைத் தமிழகத்தின் முக்கிய விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைத்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் மைதானம்
கோவை மக்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. கோவை - எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைய உள்ளது. இதற்காகச் சுமார் 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்கு இணையாக இது உருவாக்கப்பட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கோவையில் நடைபெற இது வழிவகுக்கும். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அங்கேயே கிடைக்கும்.
ஹாக்கி மைதானம்
கோவை நேரு மைதானம் வளாகத்திலேயே சர்வதேச தரத்திலான "சிந்தெடிக் டர்ஃப்" ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. புல் தரையில் விளையாடுவதற்கும், நவீன டர்ஃப் தளத்தில் விளையாடுவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. சர்வதேச போட்டிகள் அனைத்தும் டர்ஃப் தளத்தில்தான் நடக்கும். இந்த வசதி கோவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி ஹாக்கி வீரர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாகும். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே மாநகராட்சி விளையாட்டு திடலில் ரூ.1.95 கோடியில் கைப்பந்து உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.
பாரா ஒலிம்பிக் மைதானம்
அதே பகுதியில் ரூ.1.50 கோடியில் சர்வதேச கபடி உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சார்பில் மேற்கு மண்டலம் 33-வது வார்டு ஜீவாநகரில் 1.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.90 கோடியில் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரத்தில் பாரா ஒலிம்பிக் பல்வேறு விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது.
சிவகுருபிரபாகரன்
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், "மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் மிக உயரிய பன்னாட்டு விளையாட்டு போட்டி தான் பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி. இதில் உள்விளையாட்டு போட்டிகளான மேஜை பந்தாட்டம், உட்கார்ந்த நிலையிலான கைப்பந்து, சக்கர நாற்காலி கூடைப்பந்து, பூப்பந்து போன்ற போட்டிகளும், வெளிப்புற விளையாட்டுகளான ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகிறது.
என்னென்ன வசதிகள்
உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகள் மற்றும் கழிப்பறைகள், யோகா மையம், முதலுதவி சிகிச்சை மையம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்தில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறையில் நிர்வாக அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதனால் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" இவ்வாறு கூறினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications