தனுஷ், சிவகார்த்திகேயன் கவனத்திற்கு.. அரசியல் பக்கமே வந்துடாதீங்க.. தவெகவை சேர்ந்த பெண் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வந்தால், தவெக தொண்டர்கள் செஞ்சிருவோம் என்று கோவை ரோடு ஷோவில் தவெகவைச் சேர்ந்த பெண் பேசி இருக்கிறார். விஜய்யை போல் மீண்டும் எந்த நடிகராலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், யாரும் ஆசையாக அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் என்றும் வார்னிங் கொடுத்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் 1.98 லட்சம் சதுர அடியில் 7 தளங்களுடன் பிரம்மாண்ட கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். அதற்கு முன்பாக கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை 11.4 கிமீ தூரம் ரோடு ஷோ நடைபெற்றது.

Dhanush

அப்போது முதல்வர் விஜய்க்கு அக்கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இளம் பெண்கள் பலரும் விஜய்யை பார்க்க நீண்ட நேரமாக காத்திருந்தனர். அதேபோல் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்துவிட்டு மீண்டும் திரும்பிய போது, கொட்டும் மழையிலும் அவரை காண பெண்கள் பலரும் காத்திருந்தனர்.

இதனிடையே விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர் பேசுகையில், முதல்வர் விஜய் முதல்முறையாக கோவை வருகிறார். அவரை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் அரசியலுக்கு வரப் போவதாக நினைக்கிறார்கள். யாராலும் விஜய்யை போல் மீண்டும் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது.

தயவு செய்து இந்த பக்கம் யாரும் வந்துவிடாதீர்கள். யாரோ உங்களின் மனதில் நீங்களும் சிஎம் ஆகலாம் என்று வதந்தியை பரப்புகிறார்கள். எங்களுக்கு யாரும் காசு கூட கொடுக்கவில்லை. விஜய் மீதான பாசத்திற்காக காலை 8 மணி முதலே வந்து நின்று கொண்டிருக்கிறோம். இந்த கூட்டம் யாரும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதனையும் மீறி வந்தால், நாங்கள் உங்களை செஞ்சிருவோம் என்று கூறியுள்ளார்.

நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களின் ரசிகர் மன்ற கட்டமைப்புகளை வேகப்படுத்தி வருகின்றனர். விரைவில் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லப்படும் சூழலில், தவெக தொண்டர்கள் இப்போதே அவர்களை கடுமையாக சாட தொடங்கி இருப்பது விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+