கோவையின் புதிய மாஸ்டர் பிளான்... திருப்பூரில் ரூ.1127 கோடியில் குடிநீர் திட்டங்கள்..உதயநிதி விறுவிறு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.1127 கோடி மதிப்பில் 4 குடிநீர் திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்னும் சொல்லுக்கு அர்த்தமாகத் திகழும் திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திருப்பூர் 4 குடிநீர் திட்டத்தை ரூ.1127 கோடி மதிப்பில் இன்று தொடங்கி வைத்தோம். திருப்பூர் மாநகராட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், பவானி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை அன்னூர் அருகே உள்ள அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூருக்கு சுத்தமான குடிநீர் எடுத்து வரப்படுகிறது.

Udayanidhi Stalin Launchs Coimbatores new master plan Rs. 1127 crore drinking water projects in Tirupur

பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் என்ற நிலை மாற்றப்பட்டு இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றும் 8,400 இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் இந்தத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 196 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இன்றைய தேவையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எதிர்கால நிலையையும் உணர்ந்து இந்த சிறப்புக்குரிய திட்டத்தை திருப்பூருக்கு தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. இதை பயன்படுத்தி சிறக்க திருப்பூர் மக்களுக்கு என் அன்பும் வாழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1756623987453358147

தொலைநோக்குத் திட்டங்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சீராக செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு.

அந்த வகையில், தமிழ்நாட்டின் மிகப்பெரும் தொழில் நகரமான கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.780 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பில்லூர் - 3 குடிநீர் திட்டத்தை இன்று திறந்து வைத்தோம். மேலும், கோவை மாநகராட்சியின் புதிய மாஸ்டர் பிளான் தொடர்பாக இணையவழி கருத்து கேட்பிற்கான QR Code பயன்பாட்டை தொடங்கி வைத்தோம்.

அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் - தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் - பொதுப்பணித்துறை - வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.639 கோடி மதிப்பீட்டில், நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து - நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்தினோம்.

கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினோம். எந்த சூழலிலும் மக்கள் நலனுக்கான திட்டங்களை கழக அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என உரையாற்றினோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+