மக்களே நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. வார்த்தைகளை வாபஸ் வாங்கிக்கிறேன்.. கோவையில் கலகல உதயநிதி

Subscribe to Oneindia Tamil

கோவை : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அளித்தமைக்கு கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களை நம்ப மாட்டேன் என நான் சொன்னதை வாபஸ் வாங்கி கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Recommended Video

    சொன்ன வார்த்தையை திறம்பப் பெற்ற Udayanithi Stalin | Oneindia Tamil

    கோவை நேரு நகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக சார்பில் நலத்திட் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மகளிருக்கு தையல் இயந்திரங்களை திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், " நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கோவை மக்களை நம்ப முடியாது, குசும்பு பிடித்தவர்கள் என்று கூறி சென்றேன், அதனை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளை 96 வார்டுகளில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை வெற்றிபெற செய்துள்ளனர்.

    கோவையில் வெற்றி

    கோவையில் வெற்றி

    அதே போல் 7 நகராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கோவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனவே நான் கூறிய வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவை வருவேன் என்று கூறினேன் அதேபோல் தற்போது வந்துள்ளேன்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    இந்த வெற்றியை பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு மிகுந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். தலைவர் சொன்னதைப்போல 100% அல்ல 1000% செய்து காட்டுவேன் என்று கூறினார். அதேபோல் அண்ணன் செந்தில் பாலாஜி அதே போல் செய்து காட்டியுள்ளார்.

    ஆட்சிக்கு வெற்றி

    ஆட்சிக்கு வெற்றி

    இது அவருக்கு கிடைத்த வெற்றி, மட்டுமல்ல முதல்வரின் 8 மாத கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+