தீபாவளி 2023: கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா ரயில் சேவை இன்று அறிமுகம்.. எத்தனை நாள் தெரியுமா?
கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் முன்பதிவில்லா ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்கள் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் பயணிக்க ஏதுவாக ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை நாட்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று முன் தினம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் திருச்சி, கோவை, நெல்லை, குமரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பிவதற்கும் மக்கள் சிரமமே இல்லாமல் பயணிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் நிலையில் தற்போது முன்பதிவில்லா ரயில் சேவை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.
கோவையில் காலை 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அதே போல் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். மேலும் இந்த ரயில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications