பெங்களூர் பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்.. வானதி வைத்த முக்கிய கோரிக்கை
கோவை: கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்றும், கர்நாடக மாநிலம், பெங்களூர் பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிடக் கூடாது என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: கர்நாடக மாநிலத் தலைவர் பெங்களூர் மாநகரில் இருந்து தமிழ்நாடு எல்லையான பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவையை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த தமிழ்நாடு அரசுடன் கர்நாடக மாநில அரசு பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. பெங்களூர் மாநகரும், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ஓசூரும் மெட்ரோ ரயிலால் இணைக்கப்பட்டால் பெரும் வளர்ச்சிக்கு வித்திடும்.
மக்களின் போக்குவரத்தும் எளிதாகும். அதனால், இரு மாநில மக்களும் எப்போது பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் சேவை வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால், ஓசூருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். ஓசூரில் தொழில் தொடங்க அதிகமான நிறுவனங்கள் முன்வரும் எனக் கூறப்படுவதால், இத்திட்டத்தை கைவிட கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடியவை. மெட்ரோ ரயில் என்பது வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானவை. எனவே, திட்டமிட்டபடி பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர வேண்டும். இதனால், இரு மாநிலங்களுக்கும் பெரும் நன்மை ஏற்படும். இந்த விஷயத்தில் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தில் இருப்பது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி. கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள். கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும் பேசி பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை திட்டமிட்டவாறு முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications