கமலின் கதையை முடிச்சு விட்டோம்..நீதி மய்யத்தை மீதி ஆக்கிய கோவை! கமலை வம்புக்கிழுத்த வானதி சீனிவாசன்!
சென்னை: தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் நடிகர்களை மிரட்டி மேடையேற்றி திமுகவின் புகழ் பாட வைக்கிறார்கள் எனவும், ஒரு பெரிய நடிகரையே தோற்கடித்த தொகுதி கோவை தெற்கு தொகுதி என பேசி இருக்கிறார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் கதையை முடித்தது கோவை என்றும் கூறியுள்ளார்
பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர்," கோவை தெற்கு தொகுதி என்பது மிகப்பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி என்று கமலை பெயர் குறிப்பிடாமல் சாடினார். மேலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையே முடித்த தொகுதி இந்த தொகுதி என்றார்.

வானதி சீனிவாசன்
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," வாக்காளர் பட்டியல் பணிகளில் அடுத்த ஒரு மாதம் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தல் வழங்கி வருகிறோம். திமுக SIR பணிகளை எதிர்பது போன்று, மறைமுகமாக பணிகளை ஆதரித்து பணி செய்து வருகின்றனர் என்றார். எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் நேர்மையானதாக, உண்மையாக இருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை ஒரு அரசியல் கட்சியாக ஆதரித்து அதற்கான பணியை செய்து வருகிறோம்.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 தேர்தலுக்கு தயாராகவும் சூழலை SIR ஏற்படுத்தி கொடுத்துள்ளது இதன் மூலம் மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிகளவு வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை அரசியல் கட்சி பூத் கமிட்டியினர் சரியாக தான் நீக்கப்பட்டுள்ளனரா என்பதை கவனிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் எங்கள் கட்சியினர் பெயர்களே முகவரி மாற்றம் செய்ததால் நீக்கம் செய்துள்ளனர். இதை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே செய்துள்ளனர்.
பாஜக மகளிரணி
கட்சி பாகுபாடு இன்றி பணிகள் செய்ய வேண்டும், பெயர்களை நீக்கும் நடவடிக்கை இருக்க கூடாது, பணி நீட்டிப்பு என்பது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். கே.என் நேரு மீது குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது அரசு சார்ந்த அமைப்பு வலியுறுத்துகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்கிறார்களா? ஜெயிலுக்கு போன அமைச்சர்களை ஏன் இன்னும் வைத்து உள்ளார்கள்.
செந்தில் பாலாஜி
குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சரியாக விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜி திடீரென புனிதராக மாறிவிட்டார். அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் திமுக ஊழலை ஆதரிக்கின்றது. தேர்தல் வருவதால் கூடுதலாக பெண்களுக்கு உரிமை தொகை வழங்கி உள்ளனர். திராவிட மாடல் அரசு புகழ்ந்து பேச , பணத்தை திமுக அரசு செலவு செய்கிறது. ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
திமுக விமர்சனம்
அரசாங்க பெண் அதிகாரியை மேடை ஏற்றுவதும், திமுக அரசு காரணம் போன்று நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். சினிமா நடச்சத்திரங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி, திமுக அரசுக்கு புகழ்பாட செய்கின்றனர். இது புதியது கிடையாது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 53 இடங்கள் கேட்கப்படுவதாக ஒரு செய்தி பரவுகிறது. எங்களை பற்றி எழுத வேண்டுமே அதுக்காக தான் எழுதுகிறார்கள். எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என்பதை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். மாநில தலைவர் மற்ற குழுவினர் தங்கள் கருத்துகளை மேலிடத்திற்கு தெரிவித்து வருகின்றனர். அதனால் இடையில் ஏதாவது எழுத வேண்டியது தான்." என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications