உதவிகள் செய்யவிடவில்லை.. அனுமதி கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.. வேலுமணி பேட்டி
கோவை : கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் நோய்தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்க சென்றால் வழக்குப்பதிவு செய்வதாக காவல்துறை எச்சரிக்கை விடுப்பதாக புகார் தெரிவித்தார்.
எல்லாருக்கும் உயிர்பயம் இருக்கிறது என்றும் கட்டுபாடுகள் இருந்தால் தான் கொரோனா தொற்று குறையும் என்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் நோய்தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளித்தனர். தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதலிடம் பிடித்தது கோவை நேற்று ஒருநாள் மட்டும் 4268 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் 35707 பேர் தற்பொழுது நோய்தொற்றால் பாதித்து சிகிச்சையில் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நோய்தடுப்பு பணிகளில் வேகம் காட்டவேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

அதிக பாதிப்பு கோவையில்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி, கூறுகையில், கோவை மாவட்டத்தில் அதிகமான கொரோனா தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் உள்ளது. .மாவட்ட நிர்வாகம் இதை கட்டுப்படுத்த வேண்டும் தமிழகத்திலே அதிக அளவில் பாதிப்பு கோவையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் மனு அளித்துள்ளோம்.

கூடுதல் சிகிச்சை மையங்கள்
கொரோனா பாதிப்பை போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். கோவையில் மின் மயானத்தில் சடலங்கள் எரிக்க இடம் இல்லாமல் உள்ளது இதுபற்றி ஆட்சியரிடம் தெரிவித்தோம். தடுப்பூசிகள் கூடுதலாக வரவழைத்து கொண்டு வந்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலிறுத்தினோம். பல்வேறு பகுதியில் சிகிச்சை கூடுதல் மையங்கள் திறக்க வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளை கூடுதலாக அமைக்க வேண்டும்..

கருப்பு பூஞ்சை மருந்து
கோவையில் இறப்புகள் அதிகம் வருகிறது. முறையான கண்காணிப்பு நடத்த வேண்டும் கூடுதலாக பரிசோதனை நடத்த வேண்டும் முன்பாக கோவையில்
அதிகமான வாகனங்களை வைத்து கிருமி நாசினி மருந்துகள் அடித்தோம். இப்போதும் செய்ய வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று மருந்து சிங்கப்பூரில் இருந்து கொண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிர் பயம் இருக்கிறது
பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்க சென்றால் காவல்துறை வழக்கு பதிவு செய்வதாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை.. அனுமதி கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் எல்லாருக்கும் உயிர்பயம் இருக்கிறது கட்டுபாடுகள் இருந்தால் தான் கொரோனா தொற்று குறையும். அரசு போட்ட உத்தரவுகளை மக்கள் கடை பிடிக்க வேண்டும்.

வேலுமணி வேண்டுகோள்
முதலமைச்சர் முக ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். எனவே கோவைக்கு கூடுதல் ஆக்சிஜன் படுக்கை, தடுப்பூசிகள் வழங்க வேண்டும்" இவ்வாறு வேலுமணி கூறினார். செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனை முன்பாக வேலுமணி உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அங்குள்ள பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர், பிஸ்கட், மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கினர்.












Click it and Unblock the Notifications