அண்ணாமலையும், ராமதாஸூம்.. 10 தொகுதியில் வெல்கிறதா பாஜக? டக்குனு இப்படி சொல்லிட்டாரே திமுக அமைச்சர்
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கருத்துக்களுக்கு, பதிலடி தந்துள்ளார் திமுக அமைச்சர் பெரிய கருப்பன்
கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிட்டிருக்கிறார.. எனவே, இந்த முறை தேசிய அளவில் கோவை தொகுதியின் மீது கவனம் குவிந்து வருகிறது. மாநில தலைவர் என்பதாலும், சொந்த தொகுதி என்பதாலும், கோவையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் அண்ணாமலை உள்ளார்...

கோவை மாநிலம்: மாநிலத்தில், செல்வாக்கு மிக்க தொகுதி என்பாலும், இந்த தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.. ஆனால், இதுவரை வெளியாகியிருக்கும் கருத்து கணிப்புகளின்படி, பாஜகவுக்கு பெருத்த ஆதரவு என்பது எங்குமே கிடைக்கவில்லை.. பிரதானமாக திமுகவின் கையே ஓங்கியிருக்கும் என்றும் தேர்தல் கணிப்புகள் கூறியிருக்கின்றன.
ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் நாங்கள் நிச்சய்ம வெற்றி பெறுவோம் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.. அதேபோல, கூட்டணியிலிருக்கும் பாமகவின் நிறுவனர் ராமதாஸோ, 40 இடங்களையும் நாங்கள் தான் பிடிப்போம் என்று சொல்லி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெரிய கருப்பன், "தேர்தல் நடத்தாமல் போகிற அரசாங்கம் இது கிடையாது.. கடந்த ஆட்சி காலத்தில் நடக்காத தேர்தல்களையும் நடத்தி, ஜனநாயகத்தை நிலை நாட்டியவர்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின்..
கூட்டுறவு தேர்தல்: நாம் நினைத்தால் உடனடியாக தேர்தலை நடத்திவிட முடியாது.. அதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.. உறுப்பினர்களை சேர்க்கைக்கான அவகாசம் தரவேண்டும்.. இவையெல்லாம் சரியான பிறகு தேர்தல் நடத்தப்படும்.. மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நிச்சயம் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்படும்.. அதுவும் ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்..
கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. நடவடிக்கை எடுக்கத்தானே இந்த துறைநிர்வாகம் உள்ளது.. வரலாறுகாணாத அளவிற்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் மற்றும் குழு கடன் சிறு தொழில் கடன் உள்ள கடன்கள் 2 மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது வழங்கப்பட்ட கடன் தொகை முறையாக வந்து கொண்டிருக்கிறது.
குடிநீர் தட்டுப்பாடு: வெயில் ஆரம்பித்துவிட்டதால், குடிநீர் தட்டுப்பாடு வருவது இயல்புதான்.. எனினும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.. ஒருவேளை, எங்காவது குடிநீர் கிடைக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால், அது உடனடியாக சரிசெய்யப்படும்...
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் மீது 525 கோடி ரூபாய் மோசடி புகார் வந்திருக்கிறது.. இது நல்லதில்லை.. அப்படி மோசடி நடந்திருந்தால் அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது..
டைம் இருக்கு: நடந்த முடிந்த தேர்தலில், 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்.. அதேபோ, 40 இடங்களையும் நாங்கள் தான் படிப்போம் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.. முதல்ல வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை, எல்லோருக்கும் எல்லா எண்ணிக்கையையும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது.. அதனால் அவர்கள் இஷ்டத்துக்கும் சொல்லிக்கொள்ளட்டும்" என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.












Click it and Unblock the Notifications