கோவை சாரதா காதலனுக்கு தந்த விருந்து.. கோழி கறியில் இருந்தது விஷயம்.. சிக்கியது எப்படி?
கோவை: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி என்பவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு துபாயில் பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த சாரதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அண்மையில் துபாயில் இருந்து சாரதா கோவைக்கு திரும்பினார். இந்நிலையில் சமாதானம் செய்ய வந்த டிராவல்ஸ் அதிபரை தீர்த்து கட்டிவிட்டாராம் சாரதா.. இந்த விவகாரத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விளாத்தூர் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றன. துபாயில் வசித்த சிகாமணிக்கு அங்கு தன்னிடம் பணியாற்றிய கோவையை சேர்ந்த சாரதா (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் அவர்களுக்குள் பணம் கொடுக்கல்-வாங்கலும் இருந்து வந்ததாம்.

இதில் திடீரென அவர்களுக்கு பணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் துபாயில் இருந்து சாரதா கோவைக்கு திரும்பிவிட்டார். அவரை சமாதானப்படுத்த சிகாமணி முயற்சித்தார். இதற்காக அவர் கடந்த மாதம் 21-ந்தேதி துபாயில் இருந்து கோவை வந்துள்ளாராம். இந்த நிலையில் கரூர் மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த க.பரமத்தியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆண் உடல் ஒன்று கிடந்தது.
இந்த உடல் குறித்த அங்க அடையாளங்களை பார்த்த போலீசாருக்கு மாயமானதாக கருதப்பட்ட சிகாமணியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையை சேர்ந்த தியாகராஜன்(69) என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், சிகாமணியை விருந்துக்கு அழைத்து மதுவிலும், கோழிக்கறியிலும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொன்று உடலை கரூர் பகுதியில் வீசியதாக கூறினார்.
மேலும் இந்த கொலையில் தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி, சிகாமணியின் கள்ளக்காதலி சாரதா, நிலா(33), சுவாதி(26), கூலிப்படையை சேர்ந்த புதியவன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சாரதா தவிர 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சாரதாவை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் மணியன்காரன்பாளையம் பகுதியில் சாரதா பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேரில் சென்று சாரதாவை கைது செய்தனர். சாரதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது சிகாமணி தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டினாராம். அதனை தியாகராஜன் உள்ளிட்டோரிடம் தெரிவித்து அவரை பழிவாங்க திட்டமிட்டு கொலை செய்து கரூருக்கு கொண்டு சென்று உடலை வீசியதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications