ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்.. மீண்டும் சேர்க்க வாய்ப்பு இருக்கிறதா? எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பதில்!

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பதிலளித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

whether the supporters of O. Panneer Selvam will be reinstated Answers SP Velumani in Coimbatore

அதிமுகவில் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டது.

அதேபோல் அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஓபிஎஸ் - இபிஎஸ் இடையேயான பதவி மோதல் உச்சத்திலேயே இருக்கிறது. ஒரு பக்கம் தேர்தல் ஆணையம், மறுபக்கம் நீதிமன்றம் என்று இரு தரப்பும் மோதி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவும் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில் இபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் இணைய விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, அதுகுறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும். கட்சி தலைமை முடிவு செய்வதே சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+