Shruti Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜுக்கு மாமா பொண்ணு! வழக்கறிஞர்! யார் இந்த ஸ்ருதி ரங்கராஜ்?

Subscribe to Oneindia Tamil

கோவை: குக் வித் கோமாளியின் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் யார் என்பதை பார்க்கலாம். மாதம்பட்டி தங்கவேலு விருந்தோம்பல் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார் ரங்கராஜ்!

இவர் மெகந்தி சர்கஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். பின்னர் பென்குயின் படத்திலும் நடித்தார். இவர் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுக்கிறார். இவர் எந்த ஊருக்குச் சென்றால் தாமிரபரணி தண்ணீரை அரசு அனுமதியுடன் அதற்கான கட்டணத்தை செலுத்தி கொண்டு சென்றுவிடுவாராம். அதனால்தான் சமையல் சுவை அள்ளுகிறது என்கிறார்கள்.

Shruthi Rangaraj

இவருடைய தந்தை தங்கராஜும் சமையல் கலைஞர்தான். இவர் சமைக்கும் இடங்களுக்கு சிறுவயதிலேயே ரங்கராஜ் சென்றதால் அந்த தொழில் மீது ஈர்ப்பு வந்து தற்போது அதை முழுவீச்சில் செய்து வருகிறார். நடிகர் கார்த்தி திருமணத்திற்கு கூட இவர்தான் விருந்து சமைத்தார்.

சிவராமன் வீட்டு விழா

டாக்டர் சிவராமன் வீட்டு திருமணத்தில் கொய்யா சட்னிக்காக ரங்கராஜ் பிரபலமடைந்தார். அது போல் தனது சமையலில் மைதா, வெள்ளை சர்க்கரை, செயற்கை நிறமிகளை பயன்படுத்துவதில்லை. அது போல் அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு விழாவுக்கும் இவருடைய சமையல்தான் பிரபலங்களுக்கு விருந்தானது.

ஸ்ருதி யார்

இந்த நிலையில் இவருடைய மனைவி ஸ்ருதி யார் என்பதை பார்க்கலாம். மாதம்பட்டி ரங்கராஜை போல் அவருடைய மனைவி ஸ்ருதியும் கோவையை சேர்ந்தவர்தான். அவருடைய மாமா பெண்தான் இவர்.

வழக்கறிஞர்

ஸ்ருதி கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்படிப்பை படித்து முடித்தார். அதிலிருந்து கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். ஸ்ருதி, திராவிட சிந்தனை கொண்டவர். அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை பின்பற்றி நடக்கிறார்.

ஸ்ருதி ரங்கராஜ்

அத்துடன் ஃபேஷன் டிசைனிங் படிப்பையும் படித்துள்ளார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 6இல் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த ஒரு டிஷ் நன்றாக இருந்தது என பாராட்டிய ரங்கராஜ், அந்த டிஷுக்கு லட்சுமியின் பெயரை வைத்து அடுத்த சுப நிகழ்ச்சிகளில் பரிமாற போவதாக தெரிவித்திருந்தார்.

ரங்கராஜின் தந்தை தங்கவேலு

1983ஆம் ஆண்டு ரங்கராஜின் தந்தை தங்கவேலு கேட்டரிங் கொழிலை தொடங்கினார். தங்கவேல் என்ற தனியொருவரால் ஆரம்பித்த இந்த கேட்டரிங் இன்று 2000 ஊழியர்களுடன் ஆலமரம் போல் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் கல்லூரி முடித்துவிட்டு எங்கள் குடும்பத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என விரும்பினேன்.

சிறுவாணி தண்ணீர்

என் அப்பாவுடன் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதிலும் மகர ஜோதியை விடமாட்டேன். சமையலுக்கு நான் பயன்படுத்துவது சிறுவாணி தண்ணீர்தான். அது போல் மளிகை சாமான், காய்கறிகள் உள்ளிட்டவைகளையும் நாங்களே கொண்டு சென்றுவிடுவோம்.

லுங்கி, பனியன்தான் அணியணுமா?

சமையல் செய்பவர்கள் எப்போதும் பனியன், லுங்கி, துண்டு அணிந்திருப்பார்கள் என்ற லுக்கை நான் மாற்றிக் காட்டினேன். நான் சமையல் செய்ய ஒரு ஆடை அணிந்திருந்தாலும் சமையலை முடித்துவிட்டு கோட் சூட், புத்தாடை என உடுத்திக் கொள்வேன். இதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஆள் பாதி ஆடை பாதி என்பது!

புத்தாடைகள்

மற்றொன்று சிறுவயதில் யூனிபார்ம் வாங்கவே கஷ்டமாக இருக்கும். ஆனால் எனக்கு கலர் டிரஸ் நிறைய எடுக்க ஆசை, ஆனால் எங்களால் எடுக்க முடியாது. அப்பா 1992 ஆம் ஆண்டு பிசினஸில் ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன் புத்தாடைகளை அணிய தொடங்கினேன். அது இன்று வரை தொடர்கிறது. இவ்வாறு ரங்கராஜ் மிகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+