'திருடனுக்கு தேள் கொட்டியது போல்'.. கோவையில் உல்லாச வீடியோவால் சிக்கிய இளம் பெண்.. கள்ளக்காதலன் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை உக்கடம் பகுதியில் 27 வயது இளம் பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியதுடன் அந்த பெண்ணிடம் ரூ.5¾ லட்சம் பறித்திருக்கிறார் அவரது கள்ளக்காதலன். இதனால் அந்த பெண் போலீசில் புகார் அளிக்கவே கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல்கள் பொதுவாக சிக்கலில் தான் முடிகின்றன. திருமணத்தை மீறி உறவு வைத்து கொள்ளும் ஆண் அல்லது பெண் இருவருமே கடைசியில் சொல்ல முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்குகிறார்கள். திருமணத்தை மீறிய உறவுகளுக்கு அவர்கள் எத்தனை காரணங்கள், நியாயங்கள் கற்பித்தாலும், மிகவும் தவறானது என்பதால் சமூகம் அவர்களின் நடத்தையையும், அதுபோன்ற உறவுகளையும் ஒருபோதும் ஏற்பது இல்லை.

 Why did a 27-year-old young woman in Coimbatore throw her boyfriend to jail?

இந்த சூழலில் கணவனுக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் கணவனும் ஒரு காலக்கட்டத்தில் பிளாக்மெயில் செய்யப்படுவது நடக்கிறது. மகிழ்ச்சியான நிலையில் எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவர்களது வாழ்வில் சிக்கலை சந்திக்கிறது. அப்படித்தான் கோவையில் 27 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 27 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மீனாவுக்ககு அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான அகமது ஆகில் (வயது 25) என்பவருக்கும் திடீரென பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண், அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அகமது ஆகில் தனது கள்ளக்காதலிக்கு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார் அந்த செல்போனில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்கே தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார் அமகது ஆகில்.

பின்னர் அகமது அகில், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து அந்த பெண்ணை மிரட்டி, பல முறை உல்லாசமாக இருக்குமாறு மிரட்டி பணிய வைத்துள்ளார். அதோடு அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவேன் கூறி அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன இளம் பெண் மீனா கடந்த 2022-ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக அகமது ஆகிலுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகும் அவர் தனது கள்ளக்காதலியான மீனாவிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.
இதனால் நடப்பது நடக்கட்டும் என்று தைரியமான முடிவை மீனா எடுத்தார். நேரடியாக கோவை உக்கடம் மகளிர் போலீசிடம் சென்ற அவர், தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், மிரட்டல், பணம் பறித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அகமது ஆகில் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+