வெள்ளை டிரஸ்.. அந்த மோதிரம்! ஈஷாவில் இருந்து மாயமான பெண் மர்ம மரணம்! அடையாளம் கண்டது இப்படி தானாம்!
கோவை : ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான வழக்கில் 14 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் உடலை கைப்பற்றி கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில். அவரை அடையாளம் கண்டது எப்படி? அவர் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை ஈஷா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார்.

ஈஷா யோகா மையம்
அப்போது அவரது கணவர் காலை 6 மணியளவில் அங்கு விட்டு சென்றுள்ளார்.டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு வந்துள்ளார். இதற்காக காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர், 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில், ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சி முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெண் மாயம்
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அன்றைய தினம் காலையிலேயே ஈஷா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றது தெரியவந்தது.வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டபோது, "என் கணவரிடம் பேச வேண்டும் என பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்" என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார். இதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சி
இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.பயிற்சியின்போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

பெண் சடலம்
மேலும், அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை செம்மேடு அடுத்த காந்திநகர் அருகே உள்ள கிணறு ஒன்றில் வெள்ளை நிற உடையணிந்த பெண்ணின் சடலம் மிதப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடனடியாக சுபஸ்ரீயின் கணவர் பழனிகுமாருக்கும் தகவலளித்ததுடன் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர்.

அடையாளம் கண்டது எப்படி?
அப்போது அப்பெண்ணின் உடை, அணிந்த மோதிரம் மற்றும் ஈஷாவில் பயிற்சி மேற்கொண்டதற்கான அடையாளமாக அவரது கையில் அணிந்திருந்த பேண்ட் ஆகியவற்றை வைத்து சடலமாக மீட்கப்பட்டது சுபஸ்ரீ என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தினர்.தொடர்ந்து சுபஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதே வேளையில் சுபஸ்ரீயின் மரணம் தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications