இலங்கை வடக்கு, கிழக்கு தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லையாம்- சிங்கள எம்பி விமல் வீரவன்ச
இலங்கை வடக்கு, கிழக்கு தேர்தலில் பாஜக போட்டியிடலாம் என்கிறார் சிங்கள எம்பி விமல் வீரவன்ச,
கொழும்பு: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தேர்தலில் இந்தியாவில் ஆளும் பாஜக போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை என சிங்கள எம்பி விமல் வீரவன்ச பேசியிருப்பதாக இலங்கை தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் வடக்கு கிழக்கு என்பது தமிழரின் தாயக நிலப்பரப்பு. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையைக் கொண்டிருந்தது. பின்னர் வடக்கு கிழக்கு இரண்டும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகளில் ஒன்றாக 13-வது அரசியல் சீர்திருத்தம் முன்வைக்கப்படுகிறது. 1987-ம் ஆண்டு உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13-வது திருத்தம் உருவாக்கப்பட்டது. இந்த 13-வது திருத்தமானது தமிழரின் தாயக நிலமான வடக்கு கிழக்கு இணைப்பை உறுதி செய்யக் கூடியது.
தற்போது இலங்கை பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தீவிரமாக தலையிட்டு வருகிறது. வடக்கு கிழக்கை இணைத்து மாகாண சபை அதிகாரத்தை தரக் கூடிய 13-வது திருத்தத்தை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் அடுத்தடுத்து இலங்கை சென்று திரும்பினர். ஆனால் சிங்கள பவுத்த பிக்குகளோ, 13-வது திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி போராட்டம் நடத்துகின்றனர். 13-வது திருத்த நகலை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் 13-வது திருத்தத்தால் தமிழருக்கு உரிய அதிகாரம் கிடைக்காது என்கிற அதிருப்தி குரலும் தமிழர்களிடையே உள்ளது.
இந்நிலையில் இலங்கை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசியிருப்பதாக இலங்கை தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இந்திய பிரதமர் மோடியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? இலங்கை அரசாங்கம் எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது?
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் தலைவராக எப்போது இந்திய பிரதமர் மோடி பிரகடனம் செய்யப்பட்டார்? இலங்கை வடக்கு கிழக்கு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். இது பற்றி இலங்கை அரசுதான் உரிய விளக்கம் தர வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒருதரப்பு அரசியல்வாதிகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து அரசியல் செய்கின்றனர். பாஜகவினரோ வடக்கு கிழக்கு ஆகியவற்றை இணைத்துப் பேசி அரசியல் செய்கின்றனர். இவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் ஏன் அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்க்கிறது? போகிற போக்கில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண தேர்தலில் இந்தியாவில் ஆளும் பாஜக போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை போல. இவ்வாறு விமல் வீரவன்ச கூறியதாக இலங்கை தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications