Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TIMELINE: மக்கள் எழுச்சி முதல் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியது வரை.. இலங்கையில் தொடரும் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடியுள்ள நிலையில், இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை போராட்டத்தின் தொடக்க புள்ளியிலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளின் கால வரிசையை பார்க்கலாம்.

 Economic Crisis to Preisdent Gotabaya Rajapaksa Escape: Timeline of Sri Lanka Protest

July 2022
  • ஜூலை 13: கோத்தபய எஸ்கேப்
    நாட்டில் அதிகரித்து வரும் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடியுள்ளார். இதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
  • ஜூலை 9: உச்சத்தில் போராட்டம்
    அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ தலைமையகத்தில் தலைமறைவானார்.
  • ஜூலை 1: புதிய வரலாறு
    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அடுத்த நாளே, தொடர்ந்து 9வது மாதமாக பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
June 2022
  • ஜூன் 27: பெட்ரோல் இல்லை
    இலங்கையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் விற்பனையை நிறுத்தியுள்ளதாக அரசு அறிவித்தது.
May 2022
  • ஜூன் 10: ஐநா எச்சரிக்கை
    இலங்கை உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது. நாட்டில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் மக்கள் தொகையில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் உணவு உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக ஐநா-வால் தெரிவிக்கப்பட்டது.
  • மே 9: மகிந்த ராஜபக்சே ராஜினாமா
    பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், 9 பேர் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
April 2022
  • ஏப்ரல் 19: முதல் உயிரிழப்பு
    இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதன் மூலம் போராட்டம் இன்னும் உக்கிரமாக மாறியது.
  • ஏப்ரல் 13: அரசு திவால்
    வெளிநாடுகளில் இருந்து அவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய அன்னியச் செலாவணி தீர்ந்துவிட்டதால், 51 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று அரசு அறிவிக்கப்பட்டது.
  • ஏப்ரல் 10: மருந்து பற்றாக்குறை
    இலங்கையில் நிலவிய பொருளாதார பிரச்னை காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதாக இலங்கையின் மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை விடவும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • ஏப்ரல் 5: பெரும்பான்மை இழப்பு
    தொடர்ந்து புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்ததால், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரச்னைகள் அதிகமாகியது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால், பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியினர் வலியுறுத்தினர். அன்றைய நாளே அவசர நிலையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
  • ஏப்ரல் 3: அமைச்சர்கள் ராஜினாமா
    இலங்கை அமைச்சர்கள் கூண்டோடு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகினார்.
  • ஏப்ரல் 1: அவசர நிலை
    இலங்கையில் போராட்டம் தொடங்கிய நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிக அவசர நிலையை பிரகடனபடுத்தினார். அதுமட்டுமல்லாமல், போராட்டங்களுக்கு காரணமான முக்கிய நபர்களை கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+