விலைவாசி உயர்வு..நிதிச்சரிவில் இருந்து இலங்கை எப்போது மீளும் - செந்தில் தொண்டமான் எக்ஸ்க்ளூசிவ்
இலங்கையில் பொருளாதார சரிவுக்கு கொரோனா காரணமாக இருந்தாலும் விலைவாசி உயர்வுக்கு இறக்குமதி குறைந்து போனதே காரணமாக உள்ளது.
கொழும்பு: அழகான குட்டி தேசம் இலங்கை. 4 பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு. மக்கள் சுற்றுலா செல்ல அதிகம் விரும்பும் நாடாகவும் இலங்கை இருந்தது. எல்லாம் கொரோனாவிற்கு முன்பு வரை. கொரோனா வைரஸ் மொத்தத்தையும் புரட்டிப்போட்டு விட்டது. ப்ரட், முட்டை என அவசியமான பொருட்களை வாங்க கூட அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான காரணங்களையும், பொருளாதார சரிவில் இருந்தும் விலைவாசி உயர்வில் இருந்தும் இலங்கை எப்போது மீளும் என்றும் பிரதமர் அமைச்சக இணை செயலர் செந்தில் தொண்டமான் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்
பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது இலங்கை. குன்று தங்கம் இருந்தாலும் குந்தித் தின்றால் தாங்காது என்பதுபோல வளர்ச்சிக்கு வழிதேடாமல் இலங்கை அரசு கைவசம் இருந்த அந்நியச் செலாவணி முழுவதையும் கரைத்துவிட்டது.
வெளிநாடுகளில் எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது, அதன்பின் தேயிலை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆயத்த ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, ரப்பர் ஏற்றுமதி சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்து தான் இலங்கைப் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு, சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொருளாதாரச் சரிவு
2019ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் படிப்படியாக கரையத் தொடங்கியது.

செந்தில் தொண்டைமான்
இப்போது உணவுக்காகவும், பெட்ரோலுக்காகவும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இது எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பிரதமர் அமைச்சக இணை செயலர் செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவராகவும் இருக்கிறார். இலங்கையில் உள்ள நிலவரம், விலைவாசி உயர்வு பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

கொரோனா லாக்டவுன்
கொரோனா லாக்டவுன் காரணமாக 80 சதவிகித இறக்குமதி நின்று போனது. கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பொருட்கள் வரவில்லை. இப்போது வரைக்குமே பொருட்கள் இறக்குமதிக்கு சிக்கல் நீடிக்கிறது.

விலைவாசி அதிகரிப்பு
இலங்கையில் 20 சதவிகித பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொருட்களின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்வு அதிகரித்தது. உணவு உள்ளிட்ட பொருட்களைக் கூட பாமர மக்களால் வாங்க முடியவில்லை. தேவையான பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்தால் மட்டுமே இந்த சிக்கலில் இருந்து மீள முடியும் என்றும் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

முழுமையான தீர்வு எப்போது
சுற்றுலா துறை பாதிப்பினால் நாட்டில் பண வருமானம் இல்லை. வசதியாக இருப்பவர்களுக்கு கையில் பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இல்லை என்பதும் மிகப்பெரிய சிக்கல். இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும் என்கிறார் செந்தில்

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளும்
டாலர் பற்றாக்குறையால் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை, அத்தியாவசிய தேவை. அவசர தேவைக்காக மட்டுமே டாலர் கையிருப்பு வைத்திருக்கின்றனர். டீ, ரப்பர் ஏற்றுமதி செய்கின்றனர்.
வெளிநாட்டில் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா, உக்ரைன் போர் தாமதமாகிறது. சுற்றுலா பயணிகள் படிப்படியாக வரத் தொடங்கியுள்ளனர் எனவே இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக இலங்கை படிப்படியாக மீளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video

தொண்டமான்
இந்த சிக்கல் படிப்படியாகவே நீங்கும். ஒரே நாளில் உற்பத்தியை 100 சதவிகிதம் அதிகரிக்க முடியாது என்று கூறும் அவர் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து இலங்கை இந்த பொருளாதார சிக்கல் விலைவாசி உயர்வில் இருந்து மீளும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications