வெளிநாட்டுக்கு தப்பிச்சு ஓடுங்க- மகிந்த ராஜபக்சேவை எச்சரித்த தூதர்கள்- இலங்கை மீடியாக்கள் பரபர தகவல்
கொழும்பு: இலங்கையில் நிலைமை மோசமடைந்துவிட்ட காரணத்தால் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி சென்றுவிடுமாறு இலங்கைக்கான தூதர்கள்தான் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி கொடுத்ததாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video
இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே. அதற்கு முன்னதாக புரட்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார் மகிந்த ராஜபக்சே. இதனால் கொந்தளித்த பொதுமக்கள், மகிந்த ராஜபக்சே, அவரது ஆதரவு அரசியல்வாதிகள் அத்தனை பேரின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.

ஒருகட்டத்தில் கொழும்பில் மகிந்த ராஜபக்சே தங்கி இருப்பது அவரது உயிருக்கே ஆபத்து எனவும் கூறப்பட்டது. இதனால் கொழும்பைவிட்டு தப்பி ஓடி இலங்கை எல்லையில் உள்ள திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே தப்பி ஓடியது தொடர்பாக இலங்கை ஊடகங்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பான கட்டுரையில், இலங்கையை விட்டு தப்பி ஓடிவிடுமாறு மகிந்த ராஜபக்சேவுக்கு இலங்கைக்கான தூதர்கள்தான் எச்சரித்திருக்கின்றனர்.
அத்துடன் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இலங்கை படையினரின் பாதுகாப்பில் இருந்த போது மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான வெளிநாட்டு தூதர்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மகிந்த ராஜபக்சேவுக்கு என்ன உதவி தேவை என்று கேட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டை விட்டு வெளியேறும் முன்யோசனையை மகிந்த ராஜபக்சே தனிப்பட்ட முறையில் நிராகரித்ததாக கூறப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளதியுமான சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரும்பிய போது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தோரின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாகவும் சிங்கள வார ஏடு
தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications