பெட்ரோலுக்காக காத்திருந்து பறிபோன உயிர்கள்.. இலங்கையில் உச்சத்தில் பொருளாதார நெருக்கடி சோகம்!
கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் நிரப்புவதற்காக 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்த இரண்டு முதியவர்கள் பெட்ரோல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து குறைந்துவருவதால், உள்நாட்டு நெருக்கடி மோசமாகி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் பவுடர், மருந்துகள் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசை நிற்கிறது.
உள்நாட்டு போருக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இலங்கை பொருளாதாரம், 2019ல் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு மோசமானது. அதன் பிறகு கொரோனா தாக்கத்தால், இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்தது. தற்போது உக்ரைன் போரால் அது இன்னும் மோசமாகி இருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. பெட்ரோல்-டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா். கடும் வெயில் காரணமாக அவா்கள் உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் சுமித் விஜேசிங்களா கூறுகையில், '' தற்போது பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை வாங்கியுள்ளோம். மேலும் ஒரு கப்பலில் டீசல் வந்துள்ளது. அவற்றை பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இலங்கைக்கு 5500 மெட்ரிக் டன் டீசலும், 3300 மெட்ரிக் டன் பெட்ரோலும் தேவையாக இருந்தது. ஆனால் அது தற்போது அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலை மக்கள் வாங்கி பதுக்கி வைப்பதால் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இலங்கைக்கு 7000-8000 மெட்ரிக் டன் டீசலும், 4200-4500 மெட்ரிக் டன் பெட்ரோலும் வழங்கப்பட்டு வருகிறது'' என தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications