கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. இலங்கைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரண மூட்டையில் என்ன எழுதியுள்ளது பார்த்தீங்களா? சூப்பர்!

Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழ்நாடு அரசிடம் இருந்து இலங்கைக்கு முதல் கட்டமாக பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இலங்கைக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் இடம்பெற்றுள்ள வாசகம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 70 வருடங்களில் இல்லாத மிக மோசமான நெருக்கடி இலங்கையில் நிலவி வருகிறது. உணவிற்கே பஞ்சம் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் கையேந்தும் அவலமும் இலங்கையில் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களை தொடர்ந்து இலங்கையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பிரதமராக இருந்து மஹிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா செல்லம்-மீண்டும் இலங்கை பிரதமராகும் ரணில் விக்கிரமசிங்கே- இன்று மாலை பதவியேற்பு! இந்தியா, அமெரிக்கா செல்லம்-மீண்டும் இலங்கை பிரதமராகும் ரணில் விக்கிரமசிங்கே- இன்று மாலை பதவியேற்பு!

இலங்கை

இலங்கை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும், மருந்து, பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மூலம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக உதவ நினைக்கிறோம். இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்கள் இருவர்க்கும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் நாங்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

தீர்மானம்

தீர்மானம்

இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இலங்கைக்கு உதவ மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கைக்கு பொருட்கள் அனுப்பலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இலங்கைக்கு உதவி செய்திட மக்கள் முன் வர வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் உதவிகள் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு அனுமதி

மக்கள் வழங்கும் நிதி உதவி மூலம் பொருட்கள் வாங்கப்பட்டு இலங்கைக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவ பல்வேறு கட்சிகள் முன்வந்தன.

திமுக அரசு உதவி

திமுக அரசு உதவி

திமுக சார்பாக ஆளும் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் முதல்வர் ஸ்டாலினின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியது. அதன்படி முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் பல்வேறு மூட்டைகளில் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

என்ன சொல்கிறது?

என்ன சொல்கிறது?

இந்த நிலையில் இலங்கைக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முக்கிய வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செல்லும் நிவாரண பைகளில் "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் என வாசகம் இடம் பெற்றுள்ளது. வெள்ளை மூட்டைகளில் தமிழ்நாடு அரசின் இலட்சினையும், மத்திய அரசின் இலட்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நிவாரண நிதிக்கு பலர் கொடுத்த நிதி மூலம் இந்த உதவிகள் செய்யப்படுகிறது.

Recommended Video

    Politics பேசுவோம் | Hero-வாக பார்க்கப்பட்ட Mahinda Rajapaksa வீழ்ந்தது எப்படி?
    ஸ்டிக்கர் இல்லை

    ஸ்டிக்கர் இல்லை

    இந்த நிலையில் முதல்வரின் பெயர் தவிர புகைப்படம், ஸ்டிக்கர் போன்ற விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்ற அழகான வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. முன்னதாக சென்னை வெள்ளத்தின் போது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நிவாரணங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் இருந்தது விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது உள்ள அரசு அனுப்பிய நிவாரணத்தில் ஸ்டிக்கர் எதுவும் இடம்பெறாதது வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Love from Tamil Nadu People: The heartwarming help from Tamil Nadu Govt to Sri Lankans. தமிழ்நாடு அரசிடம் இருந்து இலங்கைக்கு முதல் கட்டமாக பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X