யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
கொழும்பு: யாழ்ப்பாண மாநகரசபை மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரை தூய்மைப்படுத்துவதற்காக சீருடையுடனான காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த காவலர்கள் சீருடையானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காவல்துறையை போன்றே இருக்கிறது என்பது சிங்கள அமைப்புகளின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி கோரிக்கை!
— Shritharan Sivagnanam (@ImShritharan) April 9, 2021
இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, மக்களுக்கான சுதந்திரம், இனங்களுக்கிடையில் சமத்துவம் இருக்கின்றது என்றால் யாழ் மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். pic.twitter.com/cM1gp90Upf
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி சிறீதரன் இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, மக்களுக்கான சுதந்திரம், இனங்களுக்கிடையில் சமத்துவம் இருக்கின்றது என்றால் யாழ் மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் சிறீதரன்.