35000 அடி உயரம்.. நடுவானில் நேருக்கு நேர் மோத பார்த்த விமானம்.. கத்திய பைலட்.. அடுத்து நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: 35000 அடி உயர்தத்தில் இலங்கை விமானம் ஒன்றும், துபாய் விமானம் ஒன்றும் நேற்று நேருக்கு நேர் மோதும்படி சென்றன. இந்த சம்பவம் இலங்கையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று லண்டலில் இருந்து இலங்கை ஏர்லைன்சுக்கு சொந்தமான UL 504 விமானம் கொழும்பு நோக்கி புறப்பட்டது. துருக்கி வான்வெளி பகுதி வழியாக இந்த விமானம் சென்றது.

இந்த விமானத்தில் கேபின் க்ரு சேர்த்து மொத்தம் 275 பேர் இருந்தனர்.

இலங்கை

இலங்கை

இந்த நிலையில் இந்த விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து முக்கியமான தகவல் ஒன்று வந்தது. அதில் நீங்கள் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறீர்கள். டிராபிக் காரணங்களால் நீங்கள் 35 அடி உயரத்திற்கு செல்ல வேண்டும் என்று துருக்கி Ankara விமான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

விமானம்

விமானம்


துருக்கி விமான கட்டுப்பாட்டு அறை தங்கள் வான் வெளியில் இலங்கை விமானம் பறந்த காரணத்தால் அவர்களுக்கு அப்போது வழிகாட்டி வந்தது. இதையடுத்து அந்த இலங்கை விமானத்தின் பைலட்டுகள் இருவரும் விமானத்தை உயர்த்தி 35 ஆயிரம் அடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால்.. ஒருமுறை சோதித்து கொள்ளலாமே என்று வேறு விமானம் எதிரே வருகிறதா என்று பார்த்துள்ளனர்.

நடுவானில் பரபரப்பு

நடுவானில் பரபரப்பு

பொதுவாக கட்டுப்பாட்டு அறை சொல்வதை விமானிகள் அப்படியே செய்வார்கள். ஆனால் இவர்கள் ஏதோ சந்தேகத்தில், 35 அடி உயரத்தில் வேறு விமானம் வருகிறதா என்று பார்த்துள்ளனர். அப்போதுதாம் பிரிட்டிஷ் விமானம் ஒன்று 35 ஆயிரம் அடி உயரத்தில் வெறும் 15 கிலோ மீட்டர் தூரத்தில் எதிர் திசையில் வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். தங்களின் ரேடாரில் அவர்கள் இதை கண்டுபிடித்து உள்ளனர்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்து உயரே செல்ல மாட்டோம் என்று விமானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் துருக்கி அதிகாரிகள் இதை கேட்காமல் மேலே போங்க.. மேலே போங்க என்று இரண்டு முறை உத்தரவிட்டுள்ளனர். இரண்டு முறை உத்தரவிட்டும், கட்டுப்பாட்டு அறை சொல்கிறது என்று கேட்காமல்.. கத்தி உள்ளனர். அதோடு 33 ஆயிரம் அடி உயரத்தில்தான் பறப்போம் என்று கூறி உள்ளனர். பின்னர் துருக்கி அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சோதனை செய்துள்ளனர்.

பைலட் கோபம்

பைலட் கோபம்

அப்போதுதான் துருக்கி அதிகாரிகளுக்கு எதிரில் பிரிட்டிஷ் விமானம் வந்தது தெரிந்துள்ளது. அதிலும் இந்த விமானம் இலங்கை விமானத்தை விட அதிக வேகத்தில் வந்துள்ளது. உடனே சுதாரித்த அதிகாரிகள் நீங்கள் நேருக்கு நேர் மோத போகிறீர்கள். அதனால் 35 அடி உயரத்திற்கு செல்ல வேண்டாம். உங்களின் 33 அடி உயரத்திலேயே பறந்து செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். இதையடுத்து விமானிகள் அதைதான் நாங்களும் தெரிவித்தோம் என்று கோபமாக பதில் அளித்துள்ளனர்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

இந்த சம்பவம் காரணமாக நடுவானில் மிகப்பெரிய விமான விபத்து தடுக்கப்பட்டது. இரண்டு விமானம் நேருக்கு நேர் மோதும் விபத்து தடுக்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ் விமானத்தில் 240 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானமும் மோதி இருந்தால் நடுவானில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய விமான விபத்தாக இது மாறி இருக்கும். இலங்கை விமானிகள் சுதாரித்த காரணத்தால் பெரிய விமான விபத்து தடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+