கடும் பொருளாதார நெருக்கடி... தவிக்கும் இலங்கை மக்கள் - மகிந்த ராஜபக்ச வீடு அருகே மக்கள் போராட்டம்
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடு அருகே ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது.
கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வீடு அருகே பொதுமக்கள் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வருகின்றனர்.
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

தெருவில் இறங்கிய மக்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டனர்.

ஊரடங்கு அமல்
பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் உள்ளது.

மகிந்த ராஜபக்ச
இந்த நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வந்த தகவல் வெளியானது. அது வதந்தி எனவும், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. மகிந்த ராஜபச்சவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

வீடு அருகே போராட்டம்
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகிந்த ராஜபக்சவின் வீடு முன்பு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அரண்களையும் தாண்டி மக்கள் முன்னேறி வருவதால் பதற்றம் உருவாகியுள்ளது. வினை விதைத்த மகிந்த ராஜபக்ச அறுவடை செய்ய தயாராக வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications