இந்தியாவின் எதிர்ப்பை மீறி அனுமதி வழங்கிய இலங்கை; ஆக 16ல் ஹம்பன்தோட்டா வருகிறது சீன உளவு கப்பல்
கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் உளவு கப்பல் தற்போது இலங்கை துறைமுகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
'யுவான் வாங் 5' எனப்படும் இந்த கப்பல், ஆராய்ச்சி மற்றும் ஆயு்வு கப்பல் என கூறப்படுகிறது. ஆனால் இதன் பணி உளவு பார்த்தல் என இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொடர் எதிர்ப்பு காரணமாக கப்பல் இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்படாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆக.16 முதல் 22ம் தேதி வரை இலங்கையில் இக்கப்பல் நிறுத்தப்படுவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

சர்ச்சை
இந்தியா, அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‛யுவான் வாங் 5' எனும் சீனாவின் உளவு கப்பலை இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக.16 முதல் 22ம் தேதி வரை நிறுத்தப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் சீனா இந்தியாவை உளவு பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சீனாவின் உளவு கப்பலை இலங்கைக்கு அனுமதிக்க கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது. இதற்கிடையே தான் சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால், சீனாவின் உளவு கப்பல் இலங்கை நோக்கி வருவதாகவும், அதனை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாகவும் இலங்கை துறைமுக மாஸ்டர் நிர்மல் பி சில்வா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பதற்றம்
இந்த தகவலை AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில்வா உறுதி செய்துள்ளார். இக்கப்பல் துறைமுகத்தில் நிலை கொண்டிருப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். உயர்மட்ட அளவில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்று பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக இந்த கப்பல் கடந்த 11ம் தேதி வரவிருந்தது. ஆனால் இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையடுத்து இந்த தேதி 11லிருந்து 16ஆக மாறியுள்ளது. இதேபோன்று சீனாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 'தைவானை' ஒட்டியுள்ள கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல்கள் அடிக்கடி சுற்றி திரிந்துள்ளது. அப்போது அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

கடன்
முன்னதாக இலங்கையின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து பெருமளவு கடன் வாங்கியிருந்தார். இதனால் இலங்கை சீனாவுக்கு பெரும் கடனாளியாக உள்ளது. ஆனால் ராஜபச்க தற்போது சிங்கப்பூருக்கு தப்பி சென்றிருக்கிறார். இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக பரிணமித்துள்ளது. இவ்வாறு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன்களை ராஜபக்ச தவறான வழியில் செலவழித்துள்ளதாக அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Recommended Video

குத்தகை
இந்நிலையில் தற்போது சீனாவின் இந்த உளவு கப்பலை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு தகவலின்படி, இக்கப்பல் இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 1,000 கி.மீ தொலைவில் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த துறைமுகத்தை சீனா 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கப்பல் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படலாம், மேலும் இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதலில் குறிப்பிட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications