ஏர்போர்டில் அவமானப்பட்ட ராஜபக்ச! கப்பலில் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆக பிளான்? பக்கா பிளான் B-யும் ரெடி
கொழும்பு: இலங்கையில் இப்போது அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், கோத்தபய ராஜபக்சவின் அடுத்தகட்ட திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இப்போது முன்னெப்போதும் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் கடுங்கோபத்தில் உள்ள அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் தான் கோத்தபய ராஜபக்சவின் அதிபர் மாளிகையைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அதிபர் மாளிகையை அவர்கள் கைப்பற்றி உள்ள நிலையில், இது தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இலங்கை அதிபர்
இப்போது வரை இலங்கை அதிபர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச குறித்துக் கூறிய கருத்துகளையும் கூட அந்நாட்டின் சபாநாயகர் வாபஸ் பெற்றுக் கொண்டார். போராட்டகார்ரகள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போது. அவர் சீக்ரெட் பாதாள சுரங்கம் வழியாகத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல போட்டுள்ள திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன பிளான்
மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, கோத்தபய ராஜபக்ச நாளை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளையும் கொண்ட அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் மாளிகையில் இருந்த கடந்த சனிக்கிழமை வெளியேறிய 73 வயதான தலைவர் ராஜபக்ச, அங்கிருந்து துபாய் செல்ல விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏர்போர்டில் அவமானப்பட்ட ராஜபக்ச
இலங்கை போலீசாரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பவே அவர் இன்னும் அதிபர் பதவியில் இருந்து விலகாமல் உள்ளார். வெளிநாட்டிற்குச் சென்ற பின்னர் பதவி விலகுவதே அவரது திட்டம். இதற்காக அவர் விமான நிலையத்திற்கும் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், குடிவரவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை முத்திரையிட விஐபி லாபிக்கு செல்ல மறுத்துவிட்டனர். பொதுமக்கள் செல்லும் வழியாகச் சென்றால், மற்ற பயணிகளால் ஆபத்து ஏற்படுமோ என்று கோத்தபய அஞ்சி உள்ளார்.

பசில் ராஜபக்ச
முன்னதாக கோத்தபய அஞ்சி இளைய சகோதரரான பசில் ராஜபக்ச வெளிநாட்டிற்குச் செல்ல முயன்றார். இதற்காக அவர் புதிய அமெரிக்கா பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். இருப்பினும், விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவை பார்த்து அங்கிருந்த சக பயணிகள் பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி விமான நிலையத்தை விட்டு வெளியேறி உள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணுவம்
அதிபர் கோத்தபய ராஜபக்ச எங்கு உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. அதேநேரம் அவர்தான் இன்னும் ராணுவப் படைகளுக்குத் தலைவராக உள்ளார். இதனிடையே அதிபரின் நெருங்கிய ராணுவ அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடற்படை ரோந்து கப்பலில் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரோந்து கப்பல்
முன்னதாக கடந்த சனிக்கிழமை ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வடகிழக்கு துறைமுக நகரமான திருகோணமலைக்குக் கப்பல் மூலமே அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது இருக்கும் சூழலில் கோத்தபய ராஜகபக்சவை இந்தியா அல்லது மாலத்தீவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் துபாய் செல்வதே சரியானதாக இருக்கும் என்று ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிளான் பி
அப்படி இல்லையென்றால் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ஏர்போர்ட்டில் இருந்து அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்த ஆலோசனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications