கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடிமடியிலேயே" கை வைத்து.. இலங்கை மக்கள் தலையில் விழுந்த அடுத்த இடி.. இனி "இது"வும் சப்ளை இல்லையாம்

இலங்கையில் சமையல் கேஸ் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை மக்கள் அடுத்தடுத்த சோதனைக்கு ஆளாகி வருகிறார்கள்.. அந்த வகையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதாக வந்த அறிவிப்பு, அவர்களுக்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது... மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட உயர்ந்து பணவீக்கமும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

இதனால், உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதால், கொதிப்படைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்யும் அளவுக்கு முன்வந்துவிட்டனர்.

பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச

நெருக்கடி

நெருக்கடி

கடுமையான இந்த மக்கள் போராட்டத்தால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துவிட்டது.. அதேபோல, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியானது.. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை 2500 ரூபாய் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.. அதற்கு முன்பு 12.5 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை 2675 ரூபாயாக இருந்தது.

 தடாலடி முடிவு

தடாலடி முடிவு

ஏப்ரல் 22-க்குபிறகு, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 5,175 ரூபாயாக உயர்த்தப்பட்டது.. அதாவது ஒரு சிலிண்டரின் விலை தடாலடியாக 2500 ரூபாய் உயர்த்தப்பட்டது.. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் தினசரி 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், அந்த நஷ்டத்தை சமாளிப்பதற்காகவே விலை உயர்த்தப்பட்டதாகவும் காரணம் சொல்லப்பட்டது. இப்போது அடுத்த தகவல் வெளியாகி மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இலங்கையில் சமையல் சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாம்.. கையில் உள்ள இருப்பும் தீர போகிறதாம்.. இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து சிலிண்டர்களை பெற்று செல்வதாக கூறப்படுகிறது.. எனவே, நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகமும் நிறுத்தப்பட்டு இருக்கிறது... புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என்றும் இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Recommended Video

    SriLanka நிலைமை இது தான் | தமிழர்கள் சாபம் சும்மா விடுமா? | Oneindia Tamil
     சனிக்கிழமை

    சனிக்கிழமை

    கையிருப்பில் இப்போதைக்கு இருப்பது தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டும்தான்.. அதுகூட, வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை வரைதான் இருப்பு வரும்.. அதனால், சமையல் கியாஸ் சிலிண்டருக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் கேட்டுக் கொண்டுள்ளார்.. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, சமையல் சிலிண்டரும் கிடையாது என்று தெரிவித்திருப்பது மேலும் கொந்தளிப்பையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Sri Lanka stops supplying gas for domestic use, says Litro Gas chairman Vijitha Herath இலங்கையில் சமையல் கேஸ் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X