கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை: இந்திய வம்சாவளியினருக்கு பதில் தேயிலை தோட்ட பணிகளில் சீன பெண்கள்? தமிழ் எம்.பி. சந்தேகம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இந்திய வம்சாவளியினருக்குப் பதில் தேயிலை தோட்டப் பணிகளுக்கு சீன பெண்களை அழைத்து வருவார்களோ? என தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Recommended Video

    China பெண்கள் Sri Lanka தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வருவார்களோ? | Oneindia Tamil

    இலங்கையில் மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர் இந்திய வம்சாவளியினர். மலையகத் தமிழர்கள் சிங்களர் வாழும் தென்னிலங்கையின் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

    நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலை தோட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாட்டு தமிழர்கள் குடும்பம் குடும்பமாக அதே பணியை செய்து வருகின்றனர். இன்றளவும் தமிழகத்துடன் கொள்வினை கொடுப்பினை உறவுகளுடன் மலையகத் தமிழர்கள் இருந்து வருகின்றனர்.

    பலம் பொருந்திய யானை திமுக.. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிக்கு விலாவரியாக விளக்கம் தந்த முதல்வர்!பலம் பொருந்திய யானை திமுக.. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிக்கு விலாவரியாக விளக்கம் தந்த முதல்வர்!

    இலங்கை இறுதி யுத்தம்

    இலங்கை இறுதி யுத்தம்

    இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழீழத் தமிழர்கள் தாய்நிலத்தின் விடுதலைக்காக சிங்களரை எதிர்த்து யுத்தம் நடத்திய போது அந்த போராட்டத்தில் மலையகத் தமிழர்களும் இணைந்து உயிர்த்தியாகம் செய்தனர். இலங்கையில் தமிழர் விடுதலை யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சீனாவின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது.

    சீனா ஆதிக்கம்

    சீனா ஆதிக்கம்

    தற்போது இலங்கையின் துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டன. துறைமுக நகரமானது, சீனாவின் சுயாட்சி பிரதேசமாகிவிட்டது. இந்த சுயாட்சி பிரதேசத்தில் சீன மொழி, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுயாட்சி பிரதேசத்தில் இலங்கையின் சட்டங்கள் செல்லாது.

    தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷ்

    தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷ்

    இந்த பின்னணியில் கொழும்பில் பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மலையகத் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தாலும் தேயிலை தோட்டங்களை வைத்திருக்கும் பெரும் நிறுவனங்களாலும் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளவு உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தேயிலை தோட்ட நிறுவனங்களோ வேலை நாட்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.

    நெருக்கடியில் மலையகத் தமிழர்கள்

    நெருக்கடியில் மலையகத் தமிழர்கள்

    இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்கள் மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

    தேயிலை தோட்டங்களில் சீன பெண்கள்

    தேயிலை தோட்டங்களில் சீன பெண்கள்

    ஆனால் மலையகத் தமிழர்களுக்கான நிவாரணம் எதனையும் அரசு வழங்கவில்லை. இதனால்தான் தேயிலை தோட்டப் பணிகளுக்காக மலையகத் தமிழர்களை ஓரம்கட்டிவிட்டு அவர்களுக்குப் பதில் சீனப் பெண்களை அழைத்து வருவார்களோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு வடிவேல் சுரேஷ்.

    English summary
    Sri Lanka's Indian Origin Tamil MP Vadivel Suresh has raised doubt over srilanka may give employment for Chinese women in the Tea Estates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X